மேஷம்

இந்த வாரம் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சுமூகமாக முடியும். ராசியில் உள்ள சுக்கிரன் பெண் நண்பர்களின் ஆதரவை பெற்று தருவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு, விளயாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவர். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். செல்வாக்குக் கூடும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று நன்மை அடைவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்

இந்த வாரம் பழைய நண்பர்களை சந்திப்பார்கள். சனியும், குருவும் வருமானத்தை பெருக்குவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி பெறுவர். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்கள் பேச்சுக்கு தனிமரியாதை கிடைக்கும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வேலை அமையும்.
மிதுனம்

இந்த வாரம் பண வரவு உண்டு. ராசியில் உள்ள ராசியதிபதி, குரு சேர்க்கை புதிய மனிதர்கள் தொடர்பு மூலம் நன்மை தரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை செய்வர். பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்பட்டீர்களே, இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துவார்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். முகப்பொலிவு கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
கடகம்

இந்த வாரம் புதிய செய்திகள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். பத்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் எதிர்பாராத தன வரவை தருவார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது.
சிம்மம்

இது முன்னேற்றமான வாரம். குடும்ப பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் எளிதாக மனதை உணர்ச்சி வசப்படச் செய்வார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மூலம் கல்வி மேன்மை அடைவர். எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழியில் ஆதாயமுண்டு. தடைபட்ட பல வேலைகளை முடிப்பீர்கள்.
கன்னி

இந்த வாரம் திட்டமிட்ட விஷயங்கள் நடக்கும். சந்திரன் சஞ்சாரம் காரணமாக பிரயாணங்கள் மூலம் தன வரவு உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. நினைவாற்றல் கூடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல், கணினி பாடங்களை உற்சாகமாக கற்றுக்கொள்வார்கள். தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். தெளிவு பிறக்கும். தைரியமும் உண்டாகும். மரியாதைக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் நீங்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள்.
துலாம்

இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் தடைபட்ட திருமணங்களை நடத்தி வைப்பார். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். என்றாலும் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோயின் தாக்கம் குறையும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள்.
விருச்சிகம்

இவ்வாரம் மனதில் நினைத்த விஷயங்கள் கைகூடும். ராசிக்கு முன்-பின்னாக சஞ்சரிக்கும் சந்திரன் சமூகத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தித் தருவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டுமே செய்து வரவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக பாடங்களை படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ சட்டஅதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது. விவாதங்களையும் தவிர்க்கப் பாருங்கள்.
தனுசு

இந்த வாரம் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருவும், புதனும் பல வெற்றிகளை தருவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த விஷயங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி, விளையாட்டில் நற்பெயர் பெறுவர். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்கள் மனதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். பிள்ளை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடியும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் விலகும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
மகரம்

இந்த வாரம் தடைகளை கடந்து வெற்றி பெறுவர். சனியும், சுக்கிரனும் சுப காரியங்களில் உங்களை ஈடுபடச் செய்வார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். பெரிய வாய்ப்புகள் கூடி வரும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். கண் எரிச்சல், கட்டை விரலில் அடிப்படுதல் வந்துப் போகும். சில நாட்களில் தூக்கம் குறையும். சிலருக்கு சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும்.
கும்பம்

இந்த வாரம் தடைபட்ட நல்ல விஷயங்கள் நடந்தேறும். ஐந்தாம் இடத்தில் உள்ள குருவும், புதனும் உங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவார்கள். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வி பயிற்சி பெறுவார்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்கும் போது, விற்கும் போது அலட்சியம் வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். தடைப்பட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம்

இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். ஜென்ம ராசியில் உள்ள சனி தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தினாலும் ஆதாயமும் உண்டு. தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நல்ல செய்தி கிடைக்க பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவுத்திறன் சாரந்த போட்டிகளில் வெற்றி பெறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாலும் அனுகூலம் உண்டு. ஆனால் தந்தையாருக்கு அலைச்சல் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை, வீண் செலவு, டென்ஷன் வந்துபோகும். பிரபலங்களின் நட்பை இழக்க நேரிடும். வருங்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். வேலை கிடைக்கும். சொந்தம்பந்தங்களின் வருகையால் கையிருப்பு கரையும். அரசு காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும்.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்


