மேஷம்

இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்ப பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும்.தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது வேறு வேலைக்கான வாய்ப்பு பெறுவார்கள். அரசியல், பொது வாழ்வில் உள்ளவர்களின் கௌரவம் உயரும். ஆரோக்கியமும் நல்லவிதமாக இருக்கும். பூர்விக இடத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பிள்ளைகள் விஷயத்திலும் கவனம் தேவை.
ரிஷபம்

இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத பயணங்கள் ஏற்பட்டு ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டுச் சரியாகும். போட்டிகள் இருந்தாலும் அதையும் சமாளித்து விடும் ஆற்றல் பிறக்கும். தொழிலில் புதிய உத்வேகத்தைக் காணலாம். பொதுவாழ்வில் உள்ளவர்கள் பதவியும் கௌரவம் உயரும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கும் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான வாரம்.
மிதுனம்

இந்த வாரம் மனதில் நினைத்த விஷயங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடந்தேறும். பெண்மணிகளுக்கு அதிர்ஷ்டகரமான வாரம். முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் தாமதத்தையும் தடைகளையும் ஏற்படுத்தும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக பாடங்களை படிப்பதற்கான சூழல் உருவாகும். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. வெளிநாடுகளில் சென்று பணிபுரிய விருப்பம் கொண்டவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்

இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் உண்டு. நீண்ட நாட்களாக திட்டமிட்ட நல்ல விஷயங்களை செய்வீர்கள். வாழ்க்கை துணையின் உறவினர்கள் சுபகாரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பணி சார்ந்த விஷயங்களை மட்டுமே மற்றவர்களிடம் பேச வேண்டும். கலைஞர்களுக்கு ஆதாயமான வாரம் இது புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் ஆலய தரிசனம் உண்டு. பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக மாறும். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்

இந்த வாரம் தடை தாமதங்களை கடந்து வெற்றி பெறும் மன தைரியம் உருவாகும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை புதிய சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரிகள் பணப்புழக்கம் ஏற்பட்டு தொழில் விருத்தி செய்வதற்கான முயற்சிகளை தொடங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஆதாயமான வாரம் இது. அவர்கள் முயற்சி வெற்றிகரமாக அமையும். சகோதர உறவுகள் கை கொடுக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதி உங்களுக்கே எதிராக மாறும். அஜாக்கிரதையால் பொருள் இழப்பு ஏற்படும்.
கன்னி

இந்த வாரம் தடைபட்ட பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். சிறிய வியாபாரிகளாக இருந்தாலும் புதிய பணியாளர்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற முயற்சிகள் வெற்றி தரும். தற்காலிக பணியில் உள்ளவர்கள், நிரந்தரமாகும் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உற்சாகத்தைத் தரும்.
துலாம்

இந்த வாரம் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமாக பல இடங்களுக்கும் சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் பெருகி லாபம் பெறுவார்கள். பணி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு உத்தியோகஸ்தர்கள் நல்ல செய்தி கிடைக்க பெறுவீர்கள். ஏதோ ஒரு விதத்தில், வீடும் சகோதர உறவுகளும் கை கொடுக்கும். பெரியோர்களுடைய ஆசி பலத்தினால் கஷ்டங்கள் குறையும். உங்கள் பேச்சு உங்களுக்கு பிரச்னையைத் தரும்.
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இது அமைதியான வாரம். குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அது சுமூகமாக முடியும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய மேல் அதிகாரிகளின் ஆதரவை பெற்று நன்மை அடைவார்கள். புதிய வீடு கட்டுவதில் சில தடைகள் உண்டு. வாகனத்தை மாற்றுவதிலும் பின்னடைவுகள் நேரும். மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் கிடைக்க பெறுவார்கள். நல்லவர்களின் ஆசிகளும் திருத்தல யாத்திரையும் நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டு.
தனுசு

இந்த வாரம் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதனால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் மற்றும் சம்பள உயர்வு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை வயிற்று வலி ஏற்பட்டு விலகும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் உண்டு. வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான வாரம் இது. உங்கள் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து விடுங்கள். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
மகரம்

இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதாரம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கை துணையின் உறவினர்கள் மூலம் பல நன்மைகள் உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது வேறு வேலையில் இணைந்து செயல்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெறுவார்கள். சுற்றுலா செல்வார்கள். அவசரப்பட்டு ஏதாவது காரியத்தைச் செய்துவிட்டு, பின்னால் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தும் வாய்ப்பு உண்டு. அவசரப்பட வேண்டாம். உடல் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு, மருத்துவச் செலவு ஏற்படும்.
கும்பம்

இந்த வாரம் புதிய செய்திகள் கிடைத்து மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும். இல்ல துணையோடு மகிழ்ச்சியான உறவு முறை நீடிக்கும். பண வரவு உண்டு. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு இது ஒரு சிறந்த காலகட்டம். அரசு உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள், அதனால் ஏற்படும் உடல் சோர்வு, ஆகியவற்றால் மனம் வெறுத்துவிடுவீர்கள். சொந்த பந்தங்களிடையே கருத்து வேறுபாடுகளும், சுபகாரிய முயற்சிகளில் தடங்கல்களும் ஏற்படக்கூடும்.
மீனம்

மீன ராசியினருக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம். குடும்ப நிலையில் பொருளாதார உறவு திருப்திகரமாக இருக்கும். இல்ல துணையோடு மகிழ்ச்சியாக பல இடங்களுக்கும் சென்று வருவீர்கள். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வுக்கான தேர்வுகளை எழுத தயாராகுங்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை தங்கள் ஆசிரியர்கள் மூலம் பெறுவர். எதிர்பார்க்காத இடத்திலிருந்து தனவரவு உண்டு. செலவுகள் அதிகரித்தாலும் ஏதாவது விதத்தில் வரவு வந்து கொண்டே இருக்கும். ஆபரணங்கள், வாகனங்கள் மாற்றும் யோகமும் உண்டு.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்


