ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏற்படுத்தக் கூடும். அதேபோல் திருமண வாழ்க்கை, செல்வச் செழிப்பு, புகழ், கலை, அன்பு, போன்றவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் பகவான் ரிஷபம் மற்றும் துலா ராசியின் அதிபதி ஆவார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறும்போது ஏற்படும் பலன்கள் குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் ராசியில் இருந்து வெளியேறும் சுக்கிரன், வேலையில் அழுத்தத்தைக் கொடுப்பார். இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியம். இல்லையெனில் நிதி நிலைமை மோசமடையக்கூடும். செய்யும் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போவது, செய்தொழிலில் வேலையாள் பிரச்சனை, வாக்குவாதங்கள் என நிம்மதி பறிபோகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்

கன்னிக்கு மாறும் சுக்கிரன், ரிஷப ராசியினருக்கு கவலைகளை அதிகரிப்பார். பண நஷ்டம், காரியத்தடை, குழந்தைகளால் பிரச்சனை என நிம்மதியை இழக்கச் செய்வார். வியாபாரத்தை விரிவுபடுத்த, முதலீடு செய்வதில் கவனமாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகப் பெற்றோர் கஷ்டப்பட நேரிடும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
மேஷம்

கன்னிக்கு மாறும் சுக்கிரனால் அதிகம் பாதிக்கப்படப் போவது மேஷ ராசி தான். பண நட்டம் ஒரு புறம் என்றால், தொழிலில் சறுக்கல், உறவுகளிடன் சச்சரவு, குடும்பத்தில் குழப்பம் என மனதில் கவலைகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. திருமணமானவர்களிடையே சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன உளைச்சலை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களுக்கு காதல் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்

தொழில் ரீதியாக, திருப்தியின்மை, காரியத் தாமதம் என நிம்மதி பறிபோகும். திட்டமிட்ட வேலைகளை செய்ய முடியாமல் அதிருப்தி ஏற்படும். எந்த வகையான முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது. நிதி விஷயங்களை கவனமாக கையாளவும். பயணங்கள் சில கஷ்டத்தை, அலைச்சலைத் தர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலைத் தேடும் இளைஞர்களுக்கு சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனையும் படியுங்கள் : சனி பகவானால் 250 நாட்களுக்குள் கோடீஸ்வரராக போகும் சில ராசிகள்


