கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில பொருட்களை பிறரிடம் இருந்து வாங்குவது அல்லது அவர்களுக்கு தெரியாமல் எடுப்பது என்பது, கெட்ட நேரத்தை உங்களை நோக்கி அழைத்துவரும். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் அவசரத்திற்கு ஒருவரிடம் கடனாக எதாவது ஒரு அவசரத்திற்கு வாங்கி விடுகிறோம். இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் அறிவதில்லை. இதனை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது தான் இது பெரிய பிரச்சனை ஆகிறது.
அவசர தேவை என்றால் நாம் முதலில் நாடுவது அக்கம் பக்கத்து வீட்டு காரர்களை தான். ஏனென்றால், அவர்கள் நமக்கு உதவுவதும். நாம் அவர்களுக்கு உதவுவதும் வழக்கமான உதவுவதும். அது பணமாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி, மாதம் கடைசியானால் நம்மிடம் இல்லாத பொருட்களை நாம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்பதுண்டு அல்லது அவர்கள் நம்மிடம் கேட்பதுண்டு. அப்படி கேக்கும் போது நாமும் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் பொருளை நாம் கொடுத்து விடுவோம். அடுத்தவர் வீட்டுக்கு நமது வீட்டில் இருக்கணும் நமது வீட்டில் இருக்கும் பாத்திரம் அடுத்தவர் வீட்டிற்கு செல்வதும் நமக்கு தரித்திரத்தை தான் ஏற்படுத்தும்.

இரும்பு பொருட்கள்
நாம் மற்றவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை தானமாக வாங்க கூடாது. இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், தோசை கல், கடப்பாரை, அரிவாள் கத்தரிக்கோல், பொருட்களை யாரிடம் இருந்தும் தானமாக வாங்க கூடாது. இரும்பு பொருட்களும் சனிபகவானின் அம்சம் என்பதால் இதை தானமாக வாங்க கூடாது. இதை தானமாக வாங்குவதால் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும்.
இரும்பு பொருட்கள் வாங்குவது தீய பலன்களை தரும். அதனால் தான் வீட்டில் இரும்பு பொருட்களை வீட்டில் சேர்க்கக்கூடாது என்றும் அதனை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அத்யாவசிய தேவையான பொருட்களை தவிர இரும்பு பொருட்களை நாம் அதிகம் சேர்த்து வைக்கக் கூடாது. இரும்பு பொருட்களை அதிகம் வீட்டில் பயன்படுத்தினால் அது எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். அதனால் ஒருவரிடம் இருந்து இரவலாக பெரும் பாத்திரத்தை நாம் பயன்படுத்திவிட்டு உடனே அவரிடம் கொடுத்து விட வேண்டும். அதேபோல் நாம் ஒருவருக்கு பிரசாதம் வைத்து நமது பாத்திரத்தை கொடுத்தால் அங்கேயே நின்று திரும்ப நாம் அந்த பாத்திரத்தை வாங்கி விட வேண்டும்.

பிராசம் அளிக்கும் பாத்திரம்
நமது முன்னோர்கள் ஒருவருக்கு பாத்திரத்தில் பிரசாதம் அளிக்கும் போது அதை கழுவாமல் திரும்ப கொடுங்கள் என்று சொல்வார்கள். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பிரசாதம் அளித்த பாத்திரத்தை கழுவ கூடாது என்பது சாஸ்திர நியதி. அதனால்தான் நாம் பிரசாதம் வாங்கியவுடன் அந்த பிரசாதத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உடனே திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள்.
அதனால் இரும்பு தொடர்பான பொருட்களை வீட்டிற்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது குடும்பத்தில் உள்ளவர்களின் உறவுகள் மற்றும் ஒற்றுமையை பாதிக்கும். அதே சமயம் சனிக்கிழமையில் இரும்பு தொடர்பான பொருட்களை தானம் அளிப்பது சனி பகவானின் அருளை பெற உதவும். இது அதிர்ஷ்டத்தை தருவதுடன் வாழ்வில் உள்ள பிரச்சனைகள், தடைகள் ஆகியவற்றை நீக்கும்.


