வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் ஜூலை 19ஆம் தேதி சிம்ம ராசியில் நுழையப் போகும் நவகிரகங்களின் இளவரசனான புதன் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இந்த ராசியின் தான் பயணிக்கப் போகிறது. பின்னர் ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை சுக்கிரன் சிம்மத்தில் பயணிப்பார். எனவே இந்த கிரகங்களின் அமைப்பால் மீன உருவாகியுள்ள திரிகிரக யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் இந்த யோகமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசியில் புதன், சந்திரன், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. எனவே சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்

சதுர்கிரக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை பெறலாம். நிதி ரீதியாக வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்

சதுர்கிரக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சில புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு இக்கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு

சதுர்கிரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சில மதிப்புமிக்க பரிசுகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் படி இருக்கும். பேச்சால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் சில மத நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.
இதனையும் படியுங்கள் : சனியின் சஞ்சாரத்தால் சனியின் அருளை பெறும் 8 ராசிகள் இவைதான்!!!


