மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான சிவபெருமான், கல்லுக்குள் இருக்கக்கூடிய தேரைக்கும் உணவு அளிக்கக் கூடியவர். இந்து சமயத்தில் மிக முக்கிய கடவுளாக விளங்கி வரும் சிவபெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக லிங்கத்திருமேனியில் காட்சி கொடுத்து வருகிறார். சிவ சிவ என்றாலே புனிதப்படுத்திவிடுவான். செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். அப்படிப்பட்ட பரம்பொருளின் அருளை 2025ம் ஆண்டில் அதிகமாக பெறக்கூடிய ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நிலுவையிலிருந்த நிதி வழக்குகள் பிரச்சனைகள் சுலபமாக முடியும். ஏதேனும் சொந்த தொழில் ஆரம்பிக்க நினைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதோடு உங்களை தேடி பல வாய்ப்புகள் வரும். வாழ்க்கையில் எத்தனை பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய பலத்தை சிவபெருமான் உங்களுக்கு கொடுப்பார்.
சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் பலவித புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் ஏதேனும் நிதியில் சிக்கியிருந்தால் அதில் நல்ல செய்தி வரும். வேலை செய்யும் இடம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட இடங்களில் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி. ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் அனைவரது பாராட்டையும் பெறுவார்கள். நீண்ட காலமாக நிறைவேறாத சில ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிகமான பிரச்சனைகள் வரலாம் ஆனால் அது அனைத்தும் அமைதியான சூழலில் முடிந்து விடும். எத்தனை பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு அந்த பாதிப்புகள் விலகிவிடும். புதிய வணிகத் திட்டமாக இருப்பினும் அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலாக இருப்பினும் மிகப்பெரிய வெற்றி தேடிவரும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாகும். இவ்வளவு நாள் ஏற்பட்ட அவமானங்கள் விலகி நன்மைகள் பெறுவீர்கள்.
மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்குச் சிவன் அருளால் வாழ்க்கை நிறைந்து இருக்கப் போகிறது. உங்கள் வெற்றிக்குத் தடையாக இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். நீங்கள் கேட்ட உதவி உங்களுக்கு கேட்ட நேரத்தில் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். வியாபாரிகளுக்கு, இந்த ஆண்டு விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும். பணிபுரியும் இடத்தில் அனைவரது பாராட்டையும் பெறுவார்கள்.
ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகம் இருக்கும். நிதி ரீதியாக இவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் உண்டாகும். சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் ரிஷப ராசியினரின் முயற்சிகளை அங்கீகரிப்பார்கள். பெரிய வெற்றிகளை அடைய மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். உங்கள் துறையில் மிக பெரிய வெற்றி அடைவீர்கள்.இந்த ஆண்டு தொழிலில் பண முதலீடுகளை போடலாம்.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!


