மீனத்தில் புதன் சுக்கிரன் இணைவால் ஒரு சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிரன் இணைவு பொருளாதார வாய்ப்புகளை வலுவாக அமைய செய்யும். புதிய வருமான ஆதாயங்கள் கிடைக்கும் வேலையில் பதவி உயர்வு மற்றும் மதிப்பு அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும் இதுவரை சந்தித்த சிக்கல்கள் எல்லாம் சுமூகமாக முடியும். உடல்நலத்தில் ஆரோக்கியம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் லாபம் பெருகும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் மங்களகரமான யோகம் அமையும். தொழில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் உடைய கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் கடினமான சூழ்நிலையை தீர்ப்பதற்கு இது உரிய நேரமாக அமையும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலைகள் எதிர்பாராத மதிப்பு மரியாதை பாராட்டுக்கள் கிடைக்கும். கடினமான உழைப்பை போட்டால் உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும். புதிய தொழில் மற்றும் வியாபாரம் தொடங்க நல்ல நேரமாக அமையும்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் அமையும். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் சில சிரமங்களை சந்திக்கலாம். குடும்ப விஷயங்களில் பொறுமையாகவும் புரிதலுடனும் செயல்படுவது அவசியம்.
கும்ப ராசி

புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிதி நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் பொருளாதார நிதி நிலைமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கையில் வெற்றிக்கான வழி உங்கள் கையில் தான் உள்ளது எனவே கடின உழைப்பை போட்டு வெற்றியை அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையோடு மரியாதையாக நடந்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்..
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


