கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதில் சனி பகவான் மிகவும் முக்கியமானவர். மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாக போகிறார். பங்குனி மாதத்தில் நடக்கப் போகும் சூரியன் பெயர்ச்சியில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சூரிய பகவான் சனிபகவானுடன் சேர்ந்து பயணிக்க போகிறார். மீனத்தில் சனி பகவானும் சூரிய பகவானும் இணைவதால் சிலர் ராசிகளுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். தொழிலில் சிக்கல்கள் ஏற்படும் பணவிரயம் மனக்கஷ்டம் போன்றவைகள் ஏற்படும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் உருவாகும் இந்த சூரியன் சனி சேர்க்கையால் ஒரு சில ராசிகள் பாதிப்பை சந்திக்கப் போகிறார்கள் அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இணைவால் செலவுகள் அதிகரிக்கும் மேலும் விரைய சனிக்காலம் தொடங்கப் போகிறது. இதனால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதத்தில் ஏற்படப் போகும் இந்த இணைவால் உடல் சருமம் அனைத்தும் பாதிக்கப்படும். நீங்கள் இதுவரையில் எடுத்து வைத்திருந்த நல்ல பெயர் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த இணைவு சக ஊழியர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மிகவுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மேலும் பொருளாதார ரீதியாக சில செலவுகளும் அதிகரிக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியன் இணைவால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் நிலை ஏற்படும் உங்களை வீழ்த்த எதிரிகள் தீவிர முயற்சி எடுப்பார்கள் எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீன ராசி

சனிப்பெயர்ச்சியின் காரணமாக மீன ராசிக்கு ஜென்ம சனிக்காலம் தொடங்க போகிறது எனவே உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும் தேவையற்ற நிதி இழப்புகள் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சி மற்றும் மற்ற பெயர்ச்சிகளால் மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்!!


