- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு ஒரு சூப்பரான கனவாய் ரோஸ்ட் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல கனவாய் 65, கனவாய் தொக்கு, ரோஸ்ட் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல அப்படியே இந்த ரோஸ்ட் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். மீன் குழம்புக்கும் இதை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு டேஸ்டில் இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு வாங்கி சமைக்காம ஒரு தடவை இந்த கனவாய் மீன் வாங்கி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா விடவே மாட்டீங்க அடிக்கடி செய்வீங்க.
இந்த ரோஸ்ட் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. வீட்ல இருக்கக்கூடிய மசாலாக்கள் வச்சு ரொம்ப ரொம்ப ஈசியா இதனை செய்துவிடலாம். தனியா இதுக்குன்னு எந்த மசாலாவும் தேவைப்படாது. ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கனவாய் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரவா கனவா ஃப்ரை இப்படி வீட்டிலயே செய்தால் ஹோட்டல்களுக்கு போக வேண்டிய அவசியேமே இல்லை!
Ingredients
Method
கனவாய் மீனை கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் பச்சை மிளகாயையும் இஞ்சியையும் இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு மிளகு தூள் மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்துள்ள கனவாயை சேர்த்து மிளகாய் தூள் மல்லித்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வெந்து வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கனவாய் ரோஸ்ட் தயார்.






