புகழும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடன், வீண் செலவு, குறைந்த வருமானம், பண வரவு இல்லை, வந்த பணமும் கையில் தங்குவது கிடையாது, கொடுத்த பணம் வரவில்லை என பணம் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். சிலர் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். பணம் வருவது போல் இருக்கும் ஆனால் சேமிக்கவே இயலாது. இதற்கு ஆன்மிகத்தில் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கடைப்பிடித்தாலே ஓரளவு விரயங்கள் தீர்ந்து பணம் சேரத் தொடங்கும் என்கின்றன ஆன்மிக நூல்கள். அந்த வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட உச்சரிக்க வேண்டிய ராகவேந்திரரின் மந்திரத்தை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.

வாழ்க்கையை செழிப்பாக மாற ராகவேந்திர மந்திரம்
புண்ணிய புருஷராக இந்த மண்ணில் அவதரித்த மகான்களில் ஒருவர் தான் குரு ஸ்ரீ ராகவேந்திரர். இந்து மதத்தின் முக்கிய மகான்களில் ஒருவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் பிரகலாதனின் மறு அவதாரமாக கருதப்படுகிறார். கேட்டதும் பக்தர்களுக்கு அருளும் கற்பக விருட்சமாகத் திகழ்பவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். சுவாமிகள் தன் தவ பலத்தால் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ராகவேந்திர மகானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கித் துதித்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். அதிலும் இருந்த இடத்தில் இருந்தே ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய மந்திரங்களை மனதார உச்சரித்தால், ராகவேந்திரரின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்
“குருவே ராகவா! பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச பஜதாம் கல்யாண நிதயே நிதயேர்தி ஹராய ச”
“மம சர்வாமீஷ்டம் சாதய சாதய! ஆபதோ நாசய நாசய! ஸம்பதோ ப்ராயய ப்ராயய! ஸஹகுடும்பம் வர்த்தய வர்த்தய! அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு பாஹிமாம்”
இந்த வழிபாட்டை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்ததும் குளித்து விட்டு, வீட்டில் ராகவேந்திரரின் திருவுருவப் படம் இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர் வைத்து தீப, தூப ஆராதனைகள் காட்டி வடக்கு பார்த்து அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை 18 முறை அல்லது 27 முறை தொடர்ந்து மனதார சொல்லி வந்தால் வீட்டில் உள்ள வறுமை நீங்கி குடும்பத்தில் அமைதி, செல்வ வளம் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் தெய்வீக அருள் கிடைக்கும். அதோடு என்ன காரியத்தை நினைத்து அல்லது என்ன வேண்டி இந்த மந்திரத்தை சொல்கிறோமோ அது நிச்சயம் நடக்கும்.
இதனையும் படியுங்கள் : அடகு வைத்த நகையை விரைவில் திருப்ப சொல்ல வேண்டிய மந்திரம்!!


