தினமும் ஒரே மாதிரியான காலை உணவு சாபாபிட்டு போர் அடிக்குதா ? அப்போ உங்களுக்கு தான் இந்த காலை உணவு. ஏதாவது ஒன்னு புதுவிதமா சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பூரி , சப்பாத்தி , பொங்கல் அப்படி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச சப்பாத்தி இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்கள். எல்லா உணவுகள் ஆரோக்கியமான உணவுகள் தான். அப்படி இருக்கும்போது நம்ம உடல்ல காய்கறிகள் அதிகமா சேர்த்துக்குறதுனால நமக்கு இன்னும் அதிக நன்மை கிடைக்கிறது.
நம்ம இப்போ சப்பாத்தியில் ஸ்டஃப்ங் சன செய்து கொடுக்கப்போறோம். அதுவும் இது குழந்தைகளுக்காகவே செய்து தரப்போறம். குழந்தைகள் தான் எப்ப பார்த்தாலும் ஏதாவது புதிதாக உணவு வேணும் அப்படினு கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி குழந்தைகளுக்கு கொடுக்கும்போது வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது இன்னும் ரொம்பவே ஹெல்தியா இருக்கும். இந்த மாதிரி சுவையான சூப்பரான ஸ்டஃப்டு சப்பாத்தி அவங்க கடைகளில் சாப்டா அதே டேஸ்ட்ல எப்படி கொடுக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.
இந்த சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி நமக்கு வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து கூட பண்ணலாம். நமக்கு பிடித்த எந்த காய்கறிகள் வேணும்னு தோணுதோ அது எல்லாமே சேர்த்துக்கலாம் . குழந்தைகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டாங்களோ அந்த காய்கறிகளை கூட இந்த மாதிரி வித்தியாசமான உணவுகளை சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவாங்க. குழந்தைகளோட உடலோடு ஆரோக்கியத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் அந்த மாதிரி எல்லாம் உணவுகள் செய்து கொடுக்கும் பொழுது அவங்க நிச்சயமாக விரும்பி சாப்பிடுவாங்க. உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். இந்த சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
ஸ்டஃப்டு சப்பாத்தி | Stuffed Chappathi Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1 கப் கேரட்
- 1 கப் பச்சை பட்டாணி
- 1 கப் உருளைக்கிழங்கு
- 1 கப் குடைமிளகாய்
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 ஸ்பூன் சாட் மசாலா
- 1/2 ஸ்பூன் கருப்பு எள்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும் மாவு காயாமல் இருக்க சிறிதளவு எண்ணெயை அதன் மேல் தடவி ஊற வைக்க வேண்டும்
- பின் எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
- பின் அதில் கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், ஊற வைத்த பட்டாணிசேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சாட் மசாலா மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதனை வேக வைக்க வேண்டும்.
- காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்க வேண்டும்.பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவேண்டும்.
- ஒரு சப்பாத்தி மேல் தயார் செய்து வைத்துள்ள காய்கறி மசாலாவை அதில் வைத்து மேலேமற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி ரோல் போல உருட்டி கொள்ள வேண்டும்.
- இவ்வாறு அனைத்து சப்பாத்தியையும் தயார் செய்து வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்தே எடுத்து கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, எள் சேர்த்து தாளித்ததும் அதில் வேக வைதது எடுத்துள்ள ஸ்ட்ஃப்டு சப்பாத்தியை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு பரிமாறினால் சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சாதத்துக்கு சைடிஷாக சாப்பி ருசியான ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!