சுக்கிரன் பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு மகா பொற்காலம் தான்!

- Advertisement -

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், வியாபாரம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அன்புக்கும் அழகுக்கும் காரணமான சுக்கிரனின் ராசி மாற்றம் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப் போகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ மழை, வெற்றி மழை பொழியும். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷபம்

சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன் தரும். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். வருமானம் உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும்.

- Advertisement -

விருச்சிகம்

சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். தாய் வழியில் இருந்து நன்மைகளை அதிகம் பெறுவீர்கள். மேலும் உங்கள் ஆளுமை அதிகரித்து சமூகத்தில் கௌரவமும், மரியாதையையும் பெறுவீர்கள். பெற்றோர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும்.

கன்னி

சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை தரும். தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை முன்பை விட மேம்படும். உங்கள் தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளாதார நிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

இதனையும் படியுங்கள் : சனிப் பெயர்ச்சியால் 2025ல் அதிக நன்மைகளை அள்ளப் போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

-விளம்பரம்-