- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அறுசுவைகளும் நிறைந்தது தான் நமது பாரம்பரியமான உணவு. அன்றாடம் நாம் அறுசுவையையும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று தான் அந்த காலத்தில் அறுசுவை உணவு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதில் சில சுவைகளை அறவே சேர்ப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் கசப்பு சுவை. கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் பச்சை சுண்டைக்காய். சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. ஆனால், மருத்துவக் குணம் நிறைந்தது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும்.
சுண்டைக்காயும் கூட கசப்பாகதான் இருக்கும். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த சுண்டைக்காய் குழம்பு வைத்து விட்டு தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். ஒரு குண்டான் சோறு இருந்தாலும் நமக்கு அது பத்தாது. இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதில் சுவையான மசாலா குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான சுண்டைக்காய் வத்தல் குழம்பு அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் சுண்டைக்காயை பறித்து ஒரு முறை தட்டி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தனியா தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து சுண்டைக்காயை சேர்த்து அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பத்து நிமிடங்கள் கழித்து குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் மசாலா குழம்பு தயார்.






