நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் மானம் மற்றும் மரியாதைக்கு காரணமான சூரியனும், செல்வத்தை அளிப்பவனான சுக்கிரனும் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு முக்கிய கிரகங்களின் சேர்க்கையானது தற்போது கடக ராசியில் நடந்துள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில், இந்தச் சேர்க்கையானது மிதுன ராசிக்காரர்களின் பணம் மற்றும் பேச்சின் வீட்டில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பல ஆர்டர்களைப் பெறலாம். இதனால் பலன் பெறுவீர்கள்.
கடகம்

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இந்த சேர்க்கையானது கடக ராசிக்கு அதிபதி வீட்டில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும் வெளியே சிக்கி கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். ஏனெனில் இந்த சேர்க்கையானது கன்னி ராசியிலிருந்து வருமானம் மற்றும் லாப இடத்தில் நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் வருமானத்தில் பெரிய அளவில் உயர்வைப் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணத்தை சேமிப்பீர்கள்.
இதனையும் படியுங்கள் : வக்ரமடையும் குருவால் இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!


