ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒரு சில கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை இடமாற்றம் செய்கின்றனர் ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்லும் போது அனைத்து ராசிக்காரர்களுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். செப்டம்பர் 16ஆம் தேதி கிரகங்களின் ஆட்சியாளரான சூரிய பகவான் சிம்ம ராசியை விட்டுவிட்டு கன்னி ராசியில் நுழைகிறார். கன்னி ராசியில் நுழையும் சூரியன் அங்கிருந்து சனி பகவானை பார்க்கப் போகிறார் இதனால் சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
மிதுன ராசி
சூரிய பகவானின் பார்வை சனிபகவானின் மீது படுவதால் மிதுன ராசிக்கு நிலுவையில் உள்ள தடைப்பட்டு வந்த பல வேலைகள் முடிவடையும் எதிர்பாராத விதமாக வருமானம் அதிகமாகும் பொருளாதார ரீதியாக நிலை உயரும். வெளி பார்க்கக் கூடிய இடத்தில் பலவிதமான வெற்றிகளை பெறுவீர்கள் மேலும் குடும்ப வாழ்க்கையிலும் நிறைய மகிழ்ச்சியும் காண்பீர்கள் தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெற்று அதன் மூலம் சொத்துக்களை வாங்கவும் இந்த காலம் உரியது
கடக ராசி
கடக ராசிக்கு இந்த காலகட்டம் வேலையிலும் குடும்பத்திலும் வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும்.அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து கடின உழைப்பால் மிக உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள் இந்த நேரத்தில் உங்களுடைய பொருளாதார நிலையும் உயரும்.
மீன ராசி
சனியின் மீதான சூரியனின் பார்வையால் மீன ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் வெற்றியடையும் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் மனமகிழ்ச்சியையும் திருப்தியையும் வெற்றியையும் பெறுவீர்கள். வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும் நீங்கள் வியாபாரத்தில் போட்ட முதலீட்டில் லாபம் கிடைக்கும் அதன் மூலம் வெளி உருமாற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்