காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை பொங்கல் பூரி சப்பாத்தினு சாப்பிட்டு போரடிச்சு போச்சா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரைவள்ளிக்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த அடை ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செஞ்சு பாருங்க. சர்க்கரைவள்ளி கிழங்கு நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கிறதால மலச்சிக்கல் பிரச்சனையை சரியாகும் குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் இதை சாப்பிட்டால் நிறைய பிரச்சனைகள் சரியாகும்.
ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்ளோ ஆரோக்கியம் நிறைந்தது. எப்பவுமே ஒரே மாதிரியான பிரேக்ஃபாஸ்ட் செய்யாதீங்க இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க இத செய்யறதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். இதுல சர்க்கரை போட்டும் செய்யலாம். ஆனா இன்னைக்கு நம்ம சர்க்கரை போடாமல் காரசாரமா செய்யப் போறோம். பச்சை மிளகாய் போட்டாலே ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுக்கு தக்காளி சட்னி ஒரு சூப்பரான காமினேஷன்.
அப்படியே கூட சாப்பிடலாம் அதுவுமே டேஸ்டா தான் இருக்கும். இதுல நம்ம கேப்பை மாவு சேர்க்கிறதால இன்னும் சத்தானதா மாறிடும். டயட்ல இருக்கறவங்க உடல் எடையை குறைக்கிறதுக்கு கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். அவளோ ருசியா இருக்கும். உடல் எடையும் குறையும். பொதுவாவே ராகி மாவு உடல் எடையை குறைக்க கூடியது அதுலயும் நார் சத்துக்கள் அதிகமாக இருக்க சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து செய்யும் போது இன்னும் டேஸ்ட்டா அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு அடை | Sweet Potato Adai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
- 1/2 கப் கேப்பை மாவு
- 1 டீஸ்பூன் ஆர்கானோ
- 1 சிட்டிகை உப்பு
- 1 பச்சை மிளகாய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- சர்க்கரைவள்ளிக்கிழங்கை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அதனை சேர்த்து நன்றாக பிசைந்து அதனுடன் கேப்பை மாவு ஆர்கானோ பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து குட்டி குட்டி அடைகளாக தட்டி சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!





