- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பெரும்பாலும் வீட்ல இட்லி தோசை மாவு காலி ஆயிடுச்சு அப்படின்னா அந்த சமயத்துல கோதுமை மாவு இருந்தா அத வச்சு சப்பாத்தி செய்வோம் அப்படி இல்லனா கோதுமை தோசை செய்வோம். அந்த வகையில இன்னைக்கு நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப புடிச்சமான ஒரு ஸ்வீட்டான ரெசிபி தான் செய்யப் போறோம். அந்த ஸ்வீட்டான ரெசிபி. கோதுமை மாவுல தான் செய்யப் போறோம். அதுவும் ரொம்ப ரொம்ப ஈசியா வெறும் நான்கு பொருட்கள் வைத்து தான் செய்யப் போறோம். சட்டுனு குழந்தைகளுக்கு பசி எடுக்கும் போது இதை செஞ்சு கொடுத்துட்டா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க. இனிப்பு கலந்த கோதுமை தோசை தான் குழந்தைகளுக்காக செய்யப் போறோம்.
பொதுவாகவே குழந்தைகளுக்கு காரத்தை விட இனிப்பு தான் ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்கும்போது அவங்களுக்கு புடிச்ச இனிப்பை ஆரோக்கியமான முறையில் நம்மளே வீட்ல செஞ்சு கொடுத்துட்டோம் அப்படின்னா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களுக்குமே நிறைய பேருக்கு இனிப்பு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இத சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யாரும் வேணும்னாலும் பசிக்கு செஞ்சு கொடுக்கலாம். இத பிரேக்ஃபாஸ்ட்டாவும் சாப்பிடலாம் டின்னர் ஆகவும் சாப்பிடலாம்.
குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது பசியோட வருவாங்க அந்த சமயத்துல உங்களுக்கு ஸ்னாக்ஸ் மாதிரி கூட டீ காபிக்கு பதிலா இதை செஞ்சு கொடுத்து சாப்பிட வைக்கலாம். குழந்தைகள் இதை எத்தனை சாப்பிடுகிறார்கள் என்று கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு குழந்தைகளுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா குழந்தைகளே அடிக்கடி உங்ககிட்ட கேப்பாங்க. அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப சிம்பிளா சூப்பரா இருக்கும். மொத்தத்துக்கே ஒரு பத்து நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இனிப்பு கோதுமை தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பிரேக் பாஸ்ட்டுக்கு சிம்பிளா இந்த கோதுமை அடை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கோதுமை மாவு ஏலக்காய் தூள் முட்டை நாட்டு சர்க்கரை சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அதனுடன் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அதனை தோசை போல் ஊற்றி நெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை இனிப்பு தோசை தயார்.






