- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
வீட்ல எப்பவுமே நம்ம இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அதனால அவசரத்துக்காகவும் அப்பப்ப தேவைக்காகவும் நம்ம அந்த மாவை எடுத்து இட்லி, தோசை என்று செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒரு சில சமயங்களில் மாவு இல்லாத நேரத்தில் வெளியில கடைகளில் இருந்து வாங்குறதுக்கு நமக்கு பிடிக்காது அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே கோதுமை தோசை, கோதுமை சப்பாத்தி பூரின்னு செஞ்சு சாப்பிடுவதற்கு பதிலா ஒரு சூப்பரான கோதுமை அடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வெளியில தங்கி வேலை பாக்குறவங்களுக்கு எப்பவுமே காலைல சாப்பிட்டு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சுன்னா வெளியில சாப்பிடாம வீட்டிலேயே இந்த மாதிரியான சிம்பிளான ரெசிபி ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம செய்யப் போற இந்த கோதுமை அடைய 15 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட்டும் ரொம்பவே சூப்பரா இருக்கும் வெங்காயம் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாமே போடுறதால டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பராவே இருக்கும். நம்ம எல்லாரும் கோதுமை மாவுல சப்பாத்தி பூரி கோதுமை தோசை தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த கோதுமை அடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட டேஸ்ட் வித்தியாசமா இருக்கும். இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
குழந்தைகளுக்குமே காலையில பிரட் ஜாமுன்னு குடுக்குறதுக்கு பதிலா இந்த அடை செஞ்சு கொடுத்து விடுங்க. இந்த அடையில உங்களுக்கு தேவையான காய்கறிகளையும் சேர்த்துக்கலாம் பீட்ரூட் கேரட் பீன்ஸ் குடைமிளகாய் அப்படின்னு என்ன காய்கறிகள் வேணுமோ அதை சேர்த்துக்கலாம். ஆனா காய்கறிகள் இல்ல அப்படின்னாலும் பரவாயில்லை வெங்காயம் மட்டுமே சேத்துக்கிட்டா போதுமானது. அதுவே டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இதுக்கு சிம்பிளா கார சட்னி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வச்சாலே டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும்.
எப்பவுமே வெளியில போய் சாப்பிட்டு காசு வேஸ்ட் பண்றதுக்கு பதிலா உடம்புக்கு கெடுத்துக்குறதுக்கு பதிலா இந்த மாதிரி வீட்டிலேயே கோதுமை அடை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் அதுக்கப்புறம் அடிக்கடி வீட்டுல செய்வீங்க. காலைல பிரேக் பாஸ்ட் செய்யலாம் நைட்டு டின்னருக்கும் இதை செய்யலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் ஒரு தடவ செஞ்சிட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த ருசியான சிம்பிளான கோதுமை அடை சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு சத்தான இந்த வெந்தய கீரை அடை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் நறுக்கி பெரிய வெங்காயம் சோம்பு, சீரகம் உப்பு மிளகாய்த்தூள் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
லேசாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இலக்கமாக பிசைந்து கொள்ளவும்.
இறுதியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் போட்டு தோசை கல்லில் ஒரு உருண்டையை எடுத்து வைத்து தட்டி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை அடை தயார்.






