Home ஆன்மிகம் திருமணத்தில் மஞ்சள் தாலி கயிறு கட்டுவதன் ரகசியம் இது தானா!

திருமணத்தில் மஞ்சள் தாலி கயிறு கட்டுவதன் ரகசியம் இது தானா!

நாம் முன்னோர்கள் எந்தவித காரியங்கள் செய்தாலும் அதற்கு பின்னர் ஒரு மிகப்பெரிய ஆன்மீகம் அல்லது அறிவியல் இந்த இரண்டில் ஒன்று இருக்கும். அப்படி தான் கல்யாணங்களில் மணமகன் மணப்பெண் கழுத்தில் கட்டும் தாலியானது மஞ்சள் கயிறாக இருந்ததற்கு பின்னும் மிகப் பெரிய ஆன்மீக காரணம் இருக்கின்றது. அதனால் நம் கழுத்தில் இருக்கும் தாலியை வருடம் ஒரு முறை புதுப்பிக்கவும் வேண்டும் ஒரு சில புதுப்பிக்கின்றேன் என்ற பெயரில் தங்க சங்கிலி ஆக அணிந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் இதை வெறும் சடங்காக மட்டும் நினைத்து திருமணத்தின் போதே தங்கத்தினால் ஆன தாலியை கட்டிக் கொள்கிறார்கள். அதனால் மஞ்சள் கயிறு பின் இருக்கும் ஆன்மீக காரணம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

அபரிவிதமான சக்தி

நாம் திருமணத்திற்கு பயன்படுத்தப்படும் தாலிக்கயிறு ஒரு புனிதமான நூலாகவே அன்றைய நாம் முன்னோர்கள் கருதி வந்தார்கள்.. அப்படி மஞ்சள் தாலி கயிறு தயார் செய்வதற்கும் அவர்கள் புனித நூலாக நினைக்கும் பருத்தி நூல் மற்றும் பட்டு நூல் இரண்டையும் தாலிக்கயிறாக பயன்படுத்தி வந்தார்கள். இப்படி நாம் தாலிக்கயிறு செய்து அதை திருமணத்திற்கு பயன்படுத்தும் பொழுது இந்த மஞ்சள் தாலி கயிறுக்கு இருக்கு அபரிவிதமான சக்தி கிடைக்கும். அதனால் ஒவ்வொரு வருடமும் இந்த மஞ்சள் தாலிக்கயிறு புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சமநிலை

இப்படி நாம் திருமணம் செய்யும் பொழுது மஞ்சள் தாலி கயிறு பயன்படுத்துவதால் ஆணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும், பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இந்த மஞ்சள் தாலிக்கயிறு எனும் புனித நூல் இணைக்கிறது. இதனால் அந்த தாலி கயிருக்கு அபரிவிதமான சக்திகள் கிடைக்கும். மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் திருமண பந்தம் சமநிலையுடன் இருக்கும். இப்படி இருக்கும் சமயத்தில் கணவன் மனைவிகள் இடையில் இருக்கும் முடிவுகள் எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் சரிவர அவர்களால் எடுக்க முடியும் அவர்களது திருமண பந்தமும், தாம்பத்திய பந்தமும் கூட சுகமாக இருக்கும்.

சடங்காக தான் பார்க்கிறோம்

ஆனால் இன்றைய நாட்களில் தாலி கட்டுதல் என்பது ஒரு சடங்காக நாம் செய்வதால் தான் கல்யாணம் ஆகி சில நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிரச்சனைகள் ஏன் அதையும் தாண்டி கணவன் நம் மனைவி நம்மளை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற எண்ணமும், கணவனுக்கு மனைவி நம்மளை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆனால் மஞ்சள் தாலிக்கயிறு கட்டி கொள்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வராது. அதனால்தான் நம் முன்னோர்களின் திருமணம் வாழ்க்கை என்பது நன்றாகவே இருந்து வந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here