பணம் என்ற ஒற்றை வார்த்தை தான் இந்த உலகத்தையே ஆட்டி வைக்கிறது என்று கூறலாம். பணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது ஏன் இன்றைய காலகட்டத்தில் பணம் இன்றி ஒரு அணு கூட அசையாது என்றே கூறலாம். அத்தகைய பணத்தை நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு சில தாந்திரீக முறைகள் உள்ளது. அதில் ஒன்று பணத்தை எப்படி நாம் வைத்துக் கொள்ள வேண்டும் எங்கு நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும். அதனைப் பற்றி நான் மிகவும் குறித்த பதிவில் பார்க்கலாம்.

பணத்துடன் வைக்க வேண்டிய பொருட்கள்
நாம் வீட்டில் பணத்தை எங்கு வைத்தாலும் அந்த இடம் பணத்தை ஈர்க்க கூடிய இடமாக இருக்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு சில பொருட்கள் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் நாம் பணத்தை ஏலக்காய் பச்சைக் கற்பூரம் போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் அருகிலும் கிராம்பு அரக்கஜா புனுகு கோரோசனை கருங்காலிக் கட்டை கருங்காலி மாலை போன்ற தெய்வீக பொருட்களை வைக்கும் இடங்களிலும் பணத்தை வைக்க வேண்டும். மேலும் வில்வ இலை துளசி இலை போன்று கோவில்களில் கொடுக்கக்கூடிய பிரசாதங்களின் பக்கத்திலும் பணத்தை வைக்கலாம். அந்த இலைகள் காய்ந்ததும் இலைகளை மாற்றி வைக்க வேண்டும்.
மேலும் கோவில்களில் கொடுக்கப்படும் குங்குமம் விபூதி சந்தனம் போன்ற பிரசாதங்களின் அருகிலும் பணத்தை வைக்க வேண்டும். பணம் நகை இரண்டையும் அருகருகே வைத்துக் கொள்வதும் நல்லது பச்சை நிற துணியில் பணத்தை வைப்பது நல்லது மேலும் பணத்திற்கு அதிபதியான குபேரர் மகாலட்சுமி பெருமாள் போன்ற தெய்வங்களுடைய படத்திற்கு அருகிலும் பணத்தை வைக்கலாம்.
பணத்துடன் சேர்த்து வைக்கக் கூடாத பொருட்கள்
பணம் சேர இப்படி ஒரு சில பொருட்களை நாம் படத்தின் அருகில் வைக்கிறோமோ அதே போல் பணத்தை ஒரு சில இடங்களில் நாம் வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் பணத்தை மருது சீட்டு அடகு சீட்டு கடன் வாங்கியுள்ள பத்திரம் போன்ற பொருட்களை வைத்துள்ள இடங்களில் வைக்கக் கூடாது. மேலும் கூர்மையான ஊசி கத்திரிக்கோல் கத்தி ஓடாத கடிகாரம் போன்ற இரும்பு சம்பந்தமான பொருட்களின் பக்கத்திலும் பணத்தை வைக்கக்கூடாது.
என்னதான் பாடுபட்டு சம்பாதித்தாலும் பணம் நம்மிடம் நிலையாக தங்குவதற்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் இந்த விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் பணம் நிச்சயமாக கைகளில் தங்கும் நம்பிக்கையாக இந்த விஷயங்களை பின்பற்றி வாழ்வில் மாற்றங்களை அடையலாம்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி வாசம் செய்யும் சமயலறை பொருட்கள்



