எப்பவுமே இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு ஒரே மாதிரியா சட்னி சாம்பார் குருமா அப்படினு செஞ்சு ரொம்ப போர் அடிச்சு போச்சுன்னா கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபி இட்லி தோசைக்கு அருமையா இருக்கும். இந்த ரெசிபில உருளைக்கிழங்கு சேர்க்கறதால சப்பாத்தி பூரிக்கும் கூட ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதை குருமானு கூட சொல்லிக்கலாம் ஆனால் இது கும்பகோணத்தில் ரொம்ப பேமஸான கடப்பா ரெசிபி. இந்த ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்திருக்கிறப்ப செஞ்சு கொடுத்தார் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அப்ப மட்டும் இல்லாம நீங்க எப்ப வேணும்னாலும் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம்.
வெள்ளை கலர்ல இருக்கும் இந்த குருமா. இதுல நம்ம பாசிப்பருப்பும் சேர்க்க போறோம். அதனால முழுவதுமா வெள்ளை கலர்ல இல்லாம கொஞ்சம் மஞ்சள் கலர்லையும் சேர்த்து ஒரு சூப்பரான பக்குவத்துல நமக்கு கிடைக்கும். நல்லா கொத்தமல்லி இலைகள் போட்டு சுடசுட சூடான இட்லி தோசைக்கு பரிமாறினா அவ்ளோ சூப்பரா இருக்கும். வீட்ல இருக்குறவங்க ஒரே மாதிரி சட்னி சாம்பார் சாப்பிட்டு ரொம்ப சலிச்சு போயிருந்தாங்கன்னா அவங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப சொர்க்கமா இருக்கும். அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதுல தேங்காய் கசகசா எல்லாம் பேசியிருக்கிறதால இந்த ரெசிபிக்கு கொஞ்சம் கெட்டி தன்மை கொடுக்கும். சாப்பிடுவதற்கும் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான கும்பகோணம் கடப்பா ரெசிபியை கண்டிப்பா நீங்க வீட்ல செஞ்சு பார்க்கணும் உருளைக்கிழங்கும் பாசிப்பருப்பும் இருந்தா இன்னைக்கு கூட நீங்க இந்த ரெசிபியை செஞ்சு அசத்துங்க இந்த சுவையான ரெசிப்பிக்கு வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது இதுக்கு கடைகளில் போய் எதுவும் வாங்கணும் அப்படின்னு அவசியம் கிடையாது. பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு இது எல்லாமே நம்ம வீட்ல அன்றாடம் பயன்படுத்தக்கூடியது அதனால எந்த பயமும் இல்லாமல் சட்டுனு இந்த ரெசிபிய செஞ்சிடலாம். இந்த சுவையான கும்பகோணம் கடப்பா ரெசிபியை எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கருப்பு கொண்டை கடலை வெள்ளை குருமா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!






