Advertisement
சைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் இனி ருசியான பீட்ரூட் ஃப்ரை இப்படி கூட செய்யலாம்! இதன் ருசியே தனி ருசி!

Advertisement

பீட்ரூட் பூமிக்கு அடியில்   விளையும் சத்துமிக்க ஒரு காய் . பீட்ருட் ஃப்ரை ஒரு நல்ல பக்க உணவாக அமைகிறது. இந்த பீட்ருட் ஃப்ரை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம் , மிகவும் அருமையான ருசியுடன் இருக்கும். இது எளிதான, ஆரோக்கியமான செய்முறையாகும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உணவில் பீட் ரூட்டை சேர்த்துக்கொள்வது அவசியம். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதோடு பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் மூலம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள மற்றவர்களும் வெறுத்து ஒதுக்கும் ஒரு காய்கறி என்றால் அது பீட்ரூட் தான். இதனை பலரும் விரும்பி சுவைப்பது கிடையாது. ஆனால் இதில் உடம்பிற்கு தேவையான பல ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் காய்கறி சாப்பிடாமல் இருப்பதற்க்கே இவ்வளவு யோசிக்கும் தாய்மார்களுக்காக , இப்படி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த இந்த பீட்ரூட்டை எவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்களோ அது போல சுவையாக செய்வது எப்படி என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்..

Advertisement

பீட்ருட் ஃப்ரை | Beetroot Fry Recipe In Tamil

Print Recipe
பீட்ரூட்
Advertisement
பூமிக்கு அடியில்   விளையும் சத்துமிக்க ஒருகாய் . பீட்ருட் ஃப்ரைஒரு நல்ல பக்க உணவாக அமைகிறது.இந்த பீட்ருட் ஃப்ரைசாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், மிகவும் அருமையான ருசியுடன் இருக்கும். இது எளிதான, ஆரோக்கியமான செய்முறையாகும்.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உணவில் பீட் ரூட்டை சேர்த்துக்கொள்வது அவசியம். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
Advertisement
அதோடு பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் மூலம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Beetroot Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 58

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ பீட்ருட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • உப்பு தேவைக்கு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி எண்ணெய்

பொடிக்கதேவையான பொருட்கள்:

  • 4 தேக்கரண்டி எள்
  • 5 வரமிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 தேக்கரண்டி சீரகம்

Instructions

  • பீட்ருட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மிளகாயை லேசாக வறுக்கவும். சீரகம், எள், பூண்டு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும்.  
  • வெங்காயம்  வதக்கியவற்றுடன் பீட்ருட், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  • பீட்ருட்நன்கு வெந்ததும் பொடியை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.. சுவையான பீட்ருட் ஃப்ரை தயார் .

Nutrition

Serving: 500g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 2.2g | Fat: 0.2g | Saturated Fat: 78g | Fiber: 2.808g | Sugar: 6.8g | Calcium: 16mg | Iron: 0.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago