Advertisement
சட்னி

நாவில் எச்சி ஊறும் பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பீட்ரூட் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த பீட்ரூட் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

பீட்ரூட் சட்னி | Beetroot Chutney Recipe in Tamil

Print Recipe
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவ்வளவ சத்துள்ள பீட்ரூட்டை வைத்து சட்னி செய்யலாம் வாருங்கள்.
Course Breakfast, chutney, dinner
Cuisine Indian, TAMIL
Keyword BEETROOT CHUTNEY, பீட்ரூட் சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 PERSON

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • ½ TBSP சீரகம்
  • 1 TBSP கடலை பருப்பு
  • கப் பீட்ரூட் நறுக்கி கொள்ளவும்
  • 1 TBSP உளுந்த பருப்பு
  • 4 பல் பூண்டு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 காய்ந்த மிளகாய்

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ TBSP உளுந்தம் பருப்பு
  • 1 TBSP கடுகு
  • 1 காய்ந்த மிளகாய்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் சூடேறியதும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மிளகாய் வத்தல் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வறுத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு
    Advertisement
    பவுளில் போட்டு ஆற வைத்து விடுங்கள் பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  • எண்ணெய் சூடேறியவுடன் பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து நிமிடம் பீட்ரூட்டை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், பீட்ரூட் வதக்கிய பின் அனுடன் தேங்காய் சேர்த்து நாம் ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாய் இறக்கி பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சூடு ஆறும் வரை காத்திருங்கள் சூடு ஆரியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பீட்ரூட்டை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியவுடன் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும்.
  • அதற்கு பின் தாளித்ததை பீட்ரூட் சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு பற்றவில்லை என்றால் சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4PERSON | Protein: 1.3g | Sodium: 64mg | Potassium: 266mg | Fiber: 2.3g | Sugar: 6g | Vitamin C: 4mg | Calcium: 13.1mg | Iron: 0.7mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

50 நிமிடங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

3 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

6 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

8 மணி நேரங்கள் ago