- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Side Dish
காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடைய டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அற்புதமான சுவையில் பட்டர் கார்லிக் முட்டை செய்யுங்கள். இந்த பட்டர் கார்லிக் முட்டை காலையில் சாப்பிட ஏற்ற சிறந்த உணவாகும். அதோடு இதை மதிய வேளையில் லஞ்ச்பாக்ஸ் சைடு டிஷ்ஷாகவும் கொண்டு செல்லலாம். இல்லனா மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும் போது இத செஞ்சு கொடுத்து அசத்தலாம். முக்கியமாக இந்த ரெசிபி ரொம்ப மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.
ஒருமுறை இந்த பட்டர் கார்லிக் முட்டையை செய்தால், பின் அடிக்கடி இதை செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும். இது வரை முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை கிரேவி, முட்டை வறுவல் அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சிருச்சா அப்போ இந்த மாதிரி பட்டர் கார்லிக் முட்டை ஒரு தடவ செஞ்சு பாருங்க. குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வாங்க. இந்த ரெசிபியை பார்த்தாலே ஒரு ரெஸ்டாரண்டில் வாங்குன பீல் கிடைக்கும். நெஜமாவே வீட்ல தான் செஞ்சுதா இல்ல கடையில வாங்கிட்டு வந்தீங்களான்னு கேட்பாங்க அந்த அளவுக்கு ஒரு ரெஸ்டாரன்ட் பீல் கொடுக்கும்.
இதுல காரம் அதிகமா சேர்க்காததால குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இதை சைடு டிஷ்ஷா கொடுத்து விடலாம். வேகவைத்த முட்டையை அப்படியே சாப்பிட்டு போர் அடித்து விட்டால், நீங்கள் இது போல் பட்டர் கார்லிக் முட்டையை செய்து சாப்பிடலாம். அது உங்களுக்கு கூடுதல் சுவையையும் தரும். அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். முட்டை ரொம்ப விரும்பி சாப்பிடுறவங்க வித்தியாசமா சாப்பிடணும்னு ஆசைப்பட்டீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான வித்தியாசமான பட்டர் கார்லிக் முட்டை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் முட்டை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு தூள், நறுக்கிய பூண்டு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் கலந்து வைத்த முட்டையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு சோள மாவு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்து அதனுடன் ஆறவைத்த பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பால் நன்கு சுண்டி சாஸ் பதத்திற்கு வந்ததும் வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் கார்லிக் முட்டை தயார்.






