- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் நிறைய அசைவு உணவுகள் இருந்தாலும் நிறைய பேருக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று அப்படின்னா அது சிக்கன் தான். சிக்கன் வைத்து எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம். சிக்கன் வைத்து பிரியாணி சிக்கன் கிரேவி சிக்கன் 65 அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம் அதுல இன்னைக்கு நம்ம இந்த சிக்கன் வச்சு ஒரு சூப்பரான மிளகு வறுவல் செய்ய போறோம். இதுக்கு தக்காளி கூட தேவையில்லை ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சிடலாம். இந்த ருசியான டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிக்கடி இந்த ரெசிபியை செய்ய சொல்லி கேட்பாங்க.
ரசம் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும் சாம்பார் சாதம், பருப்பு சாதத்துக்கு கூட இதனை செய்து சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. மழை வரும் போது இந்த ரெசிபியை ரசித்துக் கூட வைத்து சாப்பிட்டு பாருங்க சொர்க்கமா இருக்கும்.
சளி இருமல் இருந்தா கூட பறந்து போயிடும். இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு பொடி அரைச்சு பிரெஷ்ஷா இந்த பொடியை அரைச்சு செய்றதால கண்டிப்பா டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். பொதுவா மசாலா அரைச்சு செய்ற எல்லா ரெசிபியும் சூப்பரா தான் இருக்கும் அதுல இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க. இந்த சுவையான டேஸ்ட்டான கோழி மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!
Ingredients
Method
ஒரு கடாயில் பட்டை,கிராம்பு,சோம்பு, ஏலக்காய்,சீரகம்,மிளகு, மல்லி விதைகள் அனைத்தையும் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக 10 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கோழி மிளகு வறுவல் தயார்.






