- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மத்தி மீன் நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும் நிறைய மீன் வகைகள் இருக்கு கட்லா மீன், ஜிலேபி மீன், பாறை மீன், நெத்திலி மீன், கானாங்கெழுத்தி மீன் அப்படின்னு சொல்லிட்டே போகலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மீன் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில மத்தி மீன் வச்சு ஒரு சூப்பரான பிரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட ரசம் சாதத்துக்கு இந்த ரெசிபி அவ்வளவு டேஸ்டா இருக்கும் அது மட்டும் இல்லாம மீன் குழம்பு வச்சா அதுக்கு சைடு டிஷ்ஷா மீன் ஃப்ரை ஒரே மாதிரியா செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்ல இருக்குறவங்களும் இத அடிக்கடி உங்ககிட்ட கேப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. இதுல பூண்டு தட்டி சேர்த்து புளிக்கரைசல் எல்லாம் சேர்த்து செய்றதால சுவை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். மீன் ஃப்ரை பிடிக்காதவர்களே இத ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான மத்தி மீன் பிரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
மத்தி மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதில் மீனை சேர்த்து மசாலா தடவி அரைமணி நேரம் ஊறவைத்து தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக பொரித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தட்டிய பூண்டு பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு டீஸ்பூன் மிளகு தூள் வெந்தயத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கியதும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு பொறித்து வைத்துள்ள மீனை சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான மத்தி மீன் ப்ரை தயார்.






