- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மீனில் பல வகைகள் இருக்கு கட்லா மீன், ஜிலேபி மீன், பாறை மீன், மத்தி மீன், கானகெழுத்தி மீன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொரு மீன்லையும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கும். ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு விதமான மீன் ரொம்ப பிடிக்கும் ஒரு மீன் பொரிக்க நல்லா இருக்கும் ஒரு மீன் குழம்புக்கு நல்லா இருக்கும். அந்த வகையில குழந்தை பெற்ற தாய்மார்கள் கண்டிப்பா சாப்பிட வேண்டிய பால் சுறா மீன் வச்சு ஒரு சூப்பரான புட்டு ரெசிபி செய்ய போறோம். புட்டு ரெசிபி பல வகையான மீன்ல செய்யலாம் ஆனா இந்த பால் சுறா மீன்ல செய்யும்போது கண்டிப்பாக ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். டேஸ்டான பால் சுறா மீன் புட்டு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிடுவதால் நல்லாவே சுரக்கும். அதனால மிஸ் பண்ணாம பால் சுறா மீன் வாங்கி இந்த புட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கிற மாதிரி இந்த ரெசிபி இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து செய்யும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இருமல் சளி இருந்தா கூட இந்த புட்டுல மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடும்போது சட்டுனு சளி இருமல் பறந்து போயிடும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பால் சுறா மீன் புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் இந்த சுறா மீன் கிரேவி அசத்தலான முறையில் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
பால் சுறா மீனை கழுவி உப்புமா மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை உதிர்த்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
உதிர்த்து வைத்த மீனை சேர்த்து தேவையான அளவு உப்பு தேங்காய் துருவல் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான பால் சுறா மீன் புட்டு தயார்.






