சுறா புட்டு ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!!

sura puttu
- Advertisement -

சுறா மீன் வாங்கினாலே அதை வச்சு நிறைய பேரு இந்த புட்டு ரெசிபி தான் ட்ரை பண்ணுவீங்க. சுறா மீன் புட்டு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் இந்த சுறா புட்டு சாப்பிடுவது மிக மிக நல்லது. அவங்க மட்டும் இல்லாம சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த சுறா புட்டு ரெசிபியை சாப்பிடலாம். சுடச்சுட மீன் குழம்பு வைத்து அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த சூப்பரான சுறா புட்டு ரெசிபியை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். சூடான சாதத்துல சுறா புட்டு ரெசிபியை போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி சாப்பிட்டாலும் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

-விளம்பரம்-

ரசம் சாதத்துக்கும் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் இந்த ரெசிபி. கண்டிப்பா இந்த சுறா புட்டு ரெசிபியை மிஸ் பண்ணாம இந்த மாதிரி செஞ்சு பாருங்க இப்போ ரீசண்டா குக் வித் கோமாளி ஷோ ஆரம்பிச்சாச்சு அதுல மதுமிதா இந்த ரெசிபியை செஞ்சு நடுவர்கள் கிட்ட நல்ல பாராட்டுக்கள் வாங்கி இருப்பார்கள். அதே மாதிரி ஒரு சுறா புட்டு ரெசிபி செய்யணும் அப்படின்னு உங்களுக்கு தோனி கிட்டே இருந்திருக்கும் அந்த மாதிரி ஒரு ரெசிபி செய்றதுக்கு இந்த செய்முறையை பின்பற்றுங்க. இந்த சுறா புட்டு ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். டேஸ்டான இந்த சுறா புட்டு ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் வேண்டாம் அப்படின்னு சொல்லாம சாப்பிடுவாங்க.

- Advertisement -

இதுவரைக்கும் சுறா புட்டு சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு குடுங்க. இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ரெசிபி அதனால வீட்ல அடிக்கடி இதை செய்றது நல்லது. மீன் வாங்கி என்னென்னமோ செய்திருப்பீங்க ஆனா இந்த சத்தான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி செய்றதுக்கு முன்னாடி சுறா மீனை நல்லா கழுவி வேகவைத்து எடுக்கணும். இப்ப வாங்க இந்த சுவையான சுறா மீன் புட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

சுறா புட்டு | Sura Puttu Recipe In Tamil

சுறா மீன் வாங்கினாலே அதை வச்சு நிறைய பேரு இந்த புட்டு ரெசிபி தான் ட்ரை பண்ணுவீங்க. சுறா மீன் புட்டு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் இந்த சுறா புட்டு சாப்பிடுவது மிக மிக நல்லது. அவங்க மட்டும் இல்லாம சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த சுறா புட்டு ரெசிபியை சாப்பிடலாம். சுடச்சுட மீன் குழம்பு வைத்து அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த சூப்பரான சுறா புட்டு ரெசிபியை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். சூடான சாதத்துல சுறா புட்டு ரெசிபியை போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி சாப்பிட்டாலும் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ரசம் சாதத்துக்கும் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் இந்த ரெசிபி. கண்டிப்பா இந்த சுறா புட்டு ரெசிபியை மிஸ் பண்ணாம இந்த மாதிரி செஞ்சு பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Sura Puttu
Yield: 4 People
Calories: 90kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சுறா மீன்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 2 பெரிய வெங்காயம்

செய்முறை

  • சுறா மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • அதனை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் அதனை உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தட்டிய பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • உதிர்த்து வைத்துள்ள சுறா மீன் சேர்த்து மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சுறா மீன் புட்டு தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 90kcal | Carbohydrates: 11g | Protein: 23g | Fat: 4g | Sodium: 260mg | Potassium: 200mg | Fiber: 13g | Vitamin A: 70IU | Vitamin C: 185mg | Calcium: 39mg | Iron: 27mg

இதனையும் படியுங்கள் : ருசியான நெல்லை ஸ்பெஷல் சுறா மீன் புட்டு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!