இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சுவையான அடை எப்படி செய்வதென்று பார்ப்போம். தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால், அதுவும் உங்கள் வீட்டில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளது என்றால் அதைக் கொண்டு அடை தோசை செய்யுங்கள்.
இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு காலை நேரத்தில் இந்த அடை செய்து கொடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பொதுவாக மாலை நேரத்தில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம்.
ஆனால் இது போல அடை செய்து கொடுத்துப் பாருங்கள் நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஒருமுறை இப்படி அடை செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இப்போது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை | Sweet Potato Adai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் சம்பா ரவை
- 6 காய்ந்த மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- 2 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ரவை மற்றும் மிளகாயை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ரவை, பூண்டு, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி





