மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறுனு தயிர் பூரி இப்படி செஞ்சி பாருங்கள்! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. அதற்கடுத்த அனைவராலும் விரும்பப்படுவது தயிர் பூரி தான். நம்மூரில் தான் பானி பூரி, தயிர் பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பா

By Prem Kumar · 24/11/2023

சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. அதற்கடுத்த அனைவராலும் விரும்பப்படுவது தயிர் பூரி தான். நம்மூரில் தான் பானி பூரி, தயிர் பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே, புல்கிஸ், ஃபுச்கா இவை அனைத்தும் பூரிக்கான மற்றொரு பெயர்கள். உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள பிட்சா, பர்கர், மோமோஸ் வரிசையில் தயிர் பூரியும் ஒன்று என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் தயிர் பூரி தனது சுவையால் நாக்கை ஆக்கிரமித்து வருகிறது.

உண்மையில் தயிர் பூரி எப்படி தோன்றியது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் மகாபாரத்தில் திரெளபதியால் பூரி அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இந்தியாவில் பல ஆண்டுகளாக பரவி வருகிறது. கங்கை கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றி அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பரவி தற்போது தமிழகத்திலும் இளம் தலைமுறை விரும்பும் சாட் உணவாக மாறியுள்ளது தயிர் பூரி.

தயிர் பூரி பெரும்பாலானோருக்கு விருப்பமான சாட் ஐட்டங்களில் ஒன்றாகும். சுவையான பூரியுடன் காரமான மசாலா மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடும் போது அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். என்னதான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் நம் வீட்டில் நாம் தயாரித்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இதனை குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம். இந்த சுவையான தயிர் பூரி ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full