Advertisement
சைவம்

காலை டிபனுக்கு சுட சுட ருசியான பச்சை பயறு சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

Advertisement

பச்சைப் பயறு சாதம் என்பது ஒரு கொங்கு நாட்டு உணவாகும். நம் பாரம்பரியமான உணவுகளில் அதிகம் பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் என்று சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு பயிறு வகைகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் பெறுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு பொரியல் இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள்.

எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த பச்சை பயிறு பருப்பு சாதம் வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

Advertisement

பச்சை பயறு ஏராளமான புரோட்டீனைக் கொண்ட ஒரு சுவையான மற்றும் சத்தான பயறு. இந்த பச்சை பயறை நாம் ஊற வைத்து பச்சையாகவே சாப்பிடலாம். இது தவிர பச்சை பயறை கடைந்து, அதை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். பச்சைப்பயிறு வைத்து குழம்பு தான் பெரும்பாலும் நாம் எல்லோரும் வைப்போம் அல்லவா. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக பச்சை பயிரை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்பதைப்பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பச்சை பயறு சாதம் | Pachai payaru satham recipe in tamil

Print Recipe
பச்சைப் பயறு சாதம் என்பது ஒரு கொங்கு நாட்டு உணவாகும். நம் பாரம்பரியமான உணவுகளில் அதிகம் பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் என்று சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு பயிறு வகைகளை அதிகம் கொடுப்பதால்
Advertisement
அவர்கள் உடல் ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் பெறுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு பொரியல் இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த பச்சை பயிறு பருப்பு சாதம் வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Pachai payaru satham
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 212

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 டம்ளர் அரிசி
  • 1/2 டம்ளர் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 5 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 டீஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பவுளில் அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து நன்கு கழுவி, சுத்தம் செய்து விட்டு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ‌எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு ‌பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக மசித்து வதக்கி சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பிறகு அரிசி மற்றும் ‌பாசிப்பயறை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி கலந்து விட்டு குக்கரை மூடி விடவும்.
  • பிறகு குக்கரில் 3 விசில் வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சத்தான பச்சை பயறு சாதம் தயார். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 212kcal | Carbohydrates: 8.8g | Protein: 14.2g | Fat: 0.4g | Sodium: 8mg | Potassium: 547mg | Fiber: 15.4g | Vitamin C: 13.2mg | Calcium: 80.6mg | Iron: 2.86mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

9 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

9 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

10 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

11 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

13 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

14 மணி நேரங்கள் ago