- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, evening
காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று ஒரு முறை போட்டு குடித்து பாருங்க சும்மா எனர்ஜிடிக்க இருப்பிங்க. இந்த மசாலா பௌடரை அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்துக்கொண்டால் தேவைப்படும்
பொழுதெல்லாம் பயன்படுத்தலாம். அதுமட்டும் அல்லாமல் இதில் சுக்கு, மிளகு சேர்த்திருப்பதால் சளி, இரும்பல் உள்ளவர்களுக்கு டீ போட்டு குடுத்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த மசாலா பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படியுங்கள் : டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருள்களையும் மிதமான தீயில் வறுத்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு டீ பாத்திரத்தில் தண்ணீரில் டிகாஷன் போட்டு அத்துடன் அறைத்து வைத்துள்ள பொடியை 1 ஸ்பூன் சேர்த்து டிகாஷன் ரெடி ஆனதும் தேவையான அளவு பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பால் நன்கு கொதித்து வந்ததும் ஒருடம்ளரில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து டீயை ஊற்றி அருந்துங்கள்.






