கோவிலுக்கு செல்பவர்கள் இனி இந்த பாவங்களை மட்டும் செய்யாதீர்கள்!

- Advertisement -

பொதுவாக நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்தாலும் இறைவனின் பாதங்களில் சரணடைந்து மனதார தவறை உணர்ந்து கொண்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று கூறுவார்கள். அதே போல் சில கோவில்களுக்கு நான் சென்று வரும்பொழுது அதன் காரணமாக நமது வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். இதே போல் நாம் குலதெய்வ கோவில்களுக்கு வருட கணக்கில் செல்லாமல் இருந்தால் அவர்களுடைய வாழ்வில் நிறைய கெட்ட விஷயங்களை சந்திக்க நேரிடும் எனவும் கூறுவார்கள். இப்படி ஆன்மீகத்தில் புதிராகவும் மர்மமாகவும் நம் கண்களுக்கு புலப்படாமல் பல விஷயங்கள் மறைந்திருக்கின்றன. அதேபோன்று இன்று நாம் கடவுளை பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு நாம் செய்யும் சிறு தவறுகள் நமக்கு பெரும் பாவமாக வந்து சேரும் ஆகையால் இந்த ஆன்மீக தொகுப்பில் அப்படி கோவிலுக்குள் செய்யக்கூடாத தவறுகளை பற்றி தான் நாம் இன்றைய தொகுப்பில் காண இருக்கிறோம்

-விளம்பரம்-

நாம் கோவிலுக்கு சென்று கடவுளை தான் சுற்றி வலம் வர வேண்டுமே தவிர, ஒரு மனிதன் தன்னை தானே சுற்றிக் கொண்டு வலம் வரும் தவறை ஒருபோதும் செய்யக் கூடாது யாராவது செய்ய சொன்னாலும் செய்யாதீர்கள். அடுத்தவர்கள் செய்தாலும் தடுத்து இதை செய்ய கூடாது என கூறுங்கள்.

- Advertisement -

சிவனுக்கு மிகவும் பிடித்த திருநீறு நம்முடைய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி கொண்டாது. இவ்வளவு மகத்துவம் கொண்ட திருநீற்றை கண்ணாடியை பார்த்து கொண்டே வைக்க கூடாது. சிவன் சாம்பலை எந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்காக பூசி கொள்வார் எனவே அழகாக வைத்துக் கொள்ளவதற்காக இப்படி செய்ய கூடாது.

சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது பலரும் கன்னத்தில் சிவசிவ என்று அடித்துக் கொள்வதை பார்த்திருப்போம். இப்படி சிவ சிவ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதை விஷ்ணு ஆலயங்களில் செய்யக்கூடாது. ஹரியும், சிவனும் ஒன்று என்று சொன்னாலும் அவர்களை வணங்கும் முறையில் வித்தியாசம் உள்ளது.

விநாயகர் கோவிலுக்கு செல்பவர்கள் விநாயகரை சுற்றி ஒரு முறை வலம் வந்தால் போதும் மற்ற தெய்வங்களுக்கு வலம் வருவது போல, ஒன்பது முறை, மூன்று முறை வலம் வர கூடாது. ஆனால் அரச மரத்தடியில் உள்ள விநாயகரை எவ்வளவு முறை வேண்டுமானாலும் வலம் வரலாம் அல்லது 108 முறை வலம் வரலாம்.

-விளம்பரம்-

சிவன் கோவிலுக்கு செல்லும் நபர்கள் மூன்று முறை வலம் வர வேண்டும். முக்கண் உள்ள சிவபெருமானை மூன்று முறை வலம் வருவதன் மூலம், அவருடைய அருளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதனால் சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் மூன்று முறை சன்னதியை சுற்றி வலம் வந்து வணங்குங்கள்.

சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி போன்ற பொருட்களை தாராளமாக எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் சிவன் கோயிலுக்கு சென்று வருபவர் கண்டிப்பாக காணிக்கை செலுத்தி விட்டு தான் வர வேண்டும்.

துளசி என்பது ஒரு புனிதமான பொருள் எனவே விஷ்ணு கோவிலுக்கு துளசி எடுத்து செல்பவர்கள் துளசியை அலசி எடுத்து செல்ல கூடாது. இப்படி செய்வதால் துளசியின் தெய்வீகத் தன்மை மாறாமல் இருக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here