பொதுவாக நம் மனதிற்கு ஏதாவது ஒரு சங்கடங்கள் வந்தாலோ கஷ்டமாக இருந்தாலும் கோவிலுக்கு சென்று அங்கு தெய்வத்தை வழிபட்டு வந்தால் மிகவும் மகிழ்ச்சியாக உணர முடியும். கோவிலில் உள்ள மௌனம் நம்முடைய சிந்தனைகளை மாற்றி நமக்கு ஒரு நேர்மறை ஆற்றலை கொடுக்கும். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கோவிலுக்கு சென்று தெய்வத்தை வழிபடுவது சிறந்தது. ஒரு சிலர் தினமும் கோவிலுக்கு செல்வார்கள் ஒரு சிலர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு நாள் என கோவில் செல்வார்கள்.
பிரம்மர்
பிரம்மர் நம்மை படைத்த கடவுள். ஆனால் அவருக்கு தனியாக கோவில்கள் எதுவும் இல்லை.அவரே படைக்கும் தொழிலை செய்பவராக திகழ்வதால் பிரம்மருக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தின் விளைவால் உயிரினங்களை படைக்கும் பதவியில் இருந்து விலகினார்.அதன் பிறகு தான் அவருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. அவ எந்த பதவியை மறுபடியும் பெறுவதற்காக சிவபெருமானை நினைத்து தவம் இருந்ததால் அவருடைய அருளால் இழந்த பதவி திரும்பவும் கிடைத்தது. எனவே அவரும் படைக்கும் தொழிலை மறுபடியும் செய்ய ஆரம்பித்தார் என்பது புராணங்களின் கூற்று.
திருப்பட்டூர் கோவில்

இழந்த பதவியை மீட்டெடுக்க வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய இடமாக திகழ்வது திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் கோவில். இந்த கோவிலில் பிரம்மருக்கு என்று தனியாக ஒரு சன்னதி மட்டும் இருக்கிறது அங்கு பிரம்மர் எப்பொழுதுமே மஞ்சள் காப்பு அணிந்து வாரே இருப்பார் மேலும் இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை என்று சென்றால் மிகவும் நல்லது.
பிரம்மருக்கான அபிஷேகம்
இந்த கோவிலில் பிரம்மருக்கு என அபிஷேக ஆராதனை நடைபெறும் அப்பொழுது அதில் நாம் கலந்து கொண்டு நம்முடைய ஜாதகத்தை பிரம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்டால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது அந்த கோவிலுக்கு சென்று நவகிரகங்களுக்கு 9 தீபங்களும் 27 நட்சத்திரங்களுக்கு 27 தீபங்களும் மொத்தமாக 36 தீபங்களை பிரம்மருடைய சன்னதிக்கு முன்பாக ஏற்று வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
பதஞ்சலி முனிவர் கோவில்
அந்த திருப்பட்டூர் கோவிலில் பிரம்மருடைய சன்னதிக்கு அருகிலேயே பதஞ்சலி முனிவருடைய சன்னதி இருக்கிறது. அங்கு சென்று பதஞ்சலி முனிவரின் சன்னதிக்கு முன்பாக அமைதியாக அமைந்த தியானம் செய்தால் அவருடைய அருள் நமக்கு கிடைக்கும். மேலும் மன அமைதியும் கிடைக்கும்.எனவே இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நமக்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும் இழந்த செல்வத்தை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கும். எனவே உங்களுக்கு ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் நிச்சயமாக திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருப்பட்டூர் கோவிலுக்கு சென்று உங்களுடைய தலை எழுத்தை மாற்றி நல்ல நிலைமைக்கு வரலாம்.
இதனையும் படியுங்கள் : கோவில் செல்லும் போது ஏன் அதிக தங்க நகை அணிந்து செல்ல வேண்டும் தெரியுமா ?




