- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் இறால் மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. உங்கள் வீட்டில் உள்ளோர் இறாலை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபியை செய்து போட் அடித்து விட்டதா? கவலைப்பட வேண்டாம்.
இந்த வார இறுதியில் இறாலை வாங்கி வந்து, அதைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த இளநீர் இறால் வறுவல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இறால் வறுவலை சாதம் மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இறாலை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான்.
ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். வெறும் ருசி மட்டும் தானா என்றால், அது தான் இல்லை. உங்களுக்கு தெரியாத பல உடல்நல நன்மைகள் அதிலும் தான் அடங்கியுள்ளது. குறிப்பாக இறாலில் செலினியம் அதிகம் உள்ளது. இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இறாலைக் கொண்டு சுவையான இளநீர் இறால் வறுவல் செய்து பாருங்கள். வழக்கமாக செய்கின்ற ரெசிபியை போல் செய்யாமல் இந்த வாரம் ஒரு முறை இப்படி இறால் வறுவலை செய்து பாருங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் இதனையே அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். இப்போது சுவையான இளநீர் இறால் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின் இறாலுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் உப்பு, மஞ்சள் தூள், இளநீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதன்பிறகு நாம் கலந்து வைத்துள்ள இறாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். அவ்வளவுதான் சுவையான இளநீர் இறால் வறுவல் தயார்.






