நம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். இன்று குறைவான பணத்தை சம்பாதிக்கின்ற நாம் நாளை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்போம் இதேபோல் அனைத்து வேலை செய்பவர்களும் கூட நினைப்பார்கள். சிறிய தொழிலாக இருந்தாலும் சரி பெரிய தொழிலாக இருந்தாலும் சரி நாளுக்கு நாள் லாபம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்போம். வேலியில் மட்டுமில்லாமல் படிக்கின்ற மாணவர்கள் இந்த முறை எடுத்த மதிப்பெண்ணை விட அடுத்த முறை அதிகமாக எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த சமுதாயத்தில் அனைவருமே உயர்ந்த அந்தஸ்தை பெறுவதற்கு ஓடிக் கொண்டிருக்கின்ற பகையில் அனைத்தையும் அடைவதற்கு தை மாத ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.

தை மாதத்தின் வேறு பெயர்கள்
தை மாதத்தை சூரிய மாதம் என்றும் மகர மாதம் என்றும் கூறுவார்கள். தை மாதத்தின் முதல் நாள் என்று சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் அனைவருக்குமே உள்ளது அப்படிப்பட்ட தை மாதத்தில் சூரிய பகவானுக்கு உரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் வழிபாடு செய்து வந்தோமானால் சூரிய பகவானுடைய அருளை பெற்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் அனைவரிடத்திலும் இருந்து பெற்ற அவமானங்கள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வழிகள் நமக்கு கிடைக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை செய்வதற்கு சூரிய பகவானுக்கு உரிய முழு கோதுமையை எடுத்துக் கொள்ள வேண்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு ஒரு தட்டில் ஒரு கிலோ கோதுமையை பரப்பி அதன் நடுவே ஒரு அகல் விளக்கு வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்து கொள்ள வேண்டும். கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை நெய்வீதியமாக வைத்து ஊதுபத்தி கற்பூரம் போன்றவைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு சூரிய வெளிச்சம் படும்படி நாம் அமர்ந்து சூரிய பகவானை நினைத்து தீபத்தை ஏற்றிவிட்டு சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்
ஓம் ஸ்ரீம் சூரிய நாராயணாய நமோ நம
ஓம் ஆதித்ய நமோ நம
ஓம் சிவ சிவ சூரியனே நமோ நம
என்ற மந்திரத்தை உச்சரித்த பிறகு கற்பூர ஊதுபத்தி காட்டி அனைத்து பிரச்சினைகளும் பனிபோல தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த கோதுமையை எடுத்து பறவைகளுக்கு தானமாக போட வேண்டும். இதனை மொட்டை மாடியில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம்
இந்த வழிபாட்டை தை மாதத்தில் வரக்கூடிய அனைத்து நியாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சூரிய கோரையில் செய்ய வேண்டும் வீட்டு வாசல் அல்லது மொட்டை மாடியில் செய்யலாம். சூரிய பகவானுக்கு நெய்வேதியமாக படைத்த பொருளை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அனைத்து வாரம் செய்து முடித்த பிறகு கடைசி வாரம் வழிபாடு முடிந்த பிறகு கோதுமையை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வறுமையில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும். தை மாதத்தில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சூரியனை நினைத்து இந்த வழிபாட்டை செய்வதால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : தரித்திரம் நீங்க தை மாத மகாலட்சுமி வழிபாடு!!


