நகை வைக்கும் இடத்தில் இந்த ஒரு பொருளை வையுங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கிறார்கள். ஒரு சிலரிடம் மட்டுமே தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் உள்ள தங்கத்தை அடமானமாக வைத்தும், அதை மீட்க முடியாமலும் இருக்கும் சூழலே ஏற்படுகிறது.

-விளம்பரம்-

தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு. சிலருக்கு எவ்வளவு முயன்று குண்டுமணி தங்கம் கூட வாங்க யோகம் இருக்காது. அடகு வைத்த நகையை மீட்க முடியாமல், மகளின் திருமணத்திற்கு நகை எடுக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் வீட்டில் இந்த எளிய பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் பெருகி கொண்டே இருக்கும்.

- Advertisement -

தங்கம் சேர பரிகாரம்

தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஆனால் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்தும் வாங்கிய தங்கம் வீட்டில் தங்காமல் அடகு வைக்க வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படுகிறது. கையில் பணம் இருந்தாலும் தங்கம் வாங்க முடியவில்லை, அடமானத்தில் இருக்கும் தங்கத்தை மீட்டு வந்தாலும் அது வீட்டில் தங்காமல் மீண்டும் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்ற மனக்குறை ஏராளமானவர்களுக்கு உண்டு.

தங்கத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவர் சுவர்ணலட்சுமி தாயார். அந்த சுவர்ணலட்சுமி தாயார் வாசம் செய்யும் இடமாக கருதப்படுவது திருமாலின் மார்பு. அப்படிப்பட்ட திருமாலை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் சுவர்ண தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் மேலும் மேலும் நம் இல்லத்தில் நகைகள் சேரும் என்றும் கூறப்படுகிறது.

பெருமாளுக்கு துளசி மாலை

இந்த பரிகாரத்தை நாம் புதன்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ஏனென்றால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள், எனவே ஒவ்வொரு புதன்கிழமையும் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது நாம் அவருக்கு விருப்பமான துளசி மாலையை வாங்கிச் செல்ல வேண்டும். அந்த மாலையை அவரது மார்பில் படும்படி அணிவித்து நாம் வீட்டுக்கு திரும்பும் வேளையில் அந்த மாலையை வாங்கி வர வேண்டும்.

-விளம்பரம்-

அந்த மாலை அவரது மார்பில் அணிந்திருந்ததனால் ஸ்வர்ணலட்சுமி தாயாரின் ஆசி அதில் இருக்கும். இந்த மாலையை நாம் வீட்டிற்கு எடுத்து வந்து நாம் வைத்திருக்கும் நகையின் மீது வைத்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் நகை தோஷம் அனைத்தும் நீங்கிவிடும். உங்களால் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், நீங்களே துளசி மாலை கட்டி அதை உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளுக்கு ஒரு நாள் முழுவதும் அணிவித்து அதனை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் நகை பெட்டிகளில் வைத்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் ஸ்வர்ண தோஷம் அனைத்தும் நீங்கி மேலும் மேலும் நகை நம் வீடு வந்து சேரும் என நம்பப்படுகிறது. இந்த எளிய பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்களும் செய்து மேலும் மேலும் நகையை வாங்கி உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள்.