இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளின் படி எந்த ஒரு சுப காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நல்ல நாள், நேரம் பார்த்து தான் துவங்குவது வழக்கம். நல்ல நாளில் துவங்கப்படும் காரியங்கள் சுபமாகவும், மங்கலகரமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. ஜூன் மாதம் ஆங்கிலக் காலன்டரின் அடிப்படையில் ஆறாவது மாதமாகும். ஜூன் மாதம், ரோமானிய பெண் கடவுளான ஜூனோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தியாவை பொருத்தவரை மகிழ்ச்சியை தரும் மாதமாகவே ஜூன் மாதம் கருதப்படுகிறது. 30 நாட்கள் கொண்ட இந்த மாதத்தில், பல விதமான சுபகாரியங்கள் நடைபெறும். 2024 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுப காரியம் நடத்த திட்டமிட்டிருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் இந்த மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜூன் மாத சுபமுகூர்த்த நாட்கள்
ஜூன் 02 ஞாயிறு (வைகாசி 20)
ஜூன் 09 ஞாயிறு (வைகாசி 27)
ஜூன் 10 திங்கள் (வைகாசி 28)
ஜூன் 12 புதன் (வைகாசி 30)
ஜூன் 16 ஞாயிறு (ஆனி 02)
ஜூன் 17 திங்கள் (ஆனி 03)
ஜூன் மாத விசேஷங்கள்
ஜூன் 17 திங்கள் (ஆனி 03) பக்ரீத் பண்டிகை
ஜூன் மாத விரத நாட்கள்
ஜூன் 2 ஏகாதசி
ஜூன் 4 மாத சிவராத்திரி, பிரதோஷம்
ஜூன் 5 கார்த்திகை
ஜூன் 6 அமாவாசை
ஜூன் 10 சதுர்த்தி
ஜூன் 12 சஷ்டி
ஜூன் 17 ஏகாதசி
ஜூன் 18 ஏகாதசி
ஜூன் 19 பிரதோஷம்
ஜூன் 21 பௌர்ணமி
ஜூன் 24 திருஓணம்
ஜூன் 25 சங்கடஹர சதுர்த்தி
இதனையும் படியுங்கள் : குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்





