Advertisement
சைவம்

தேங்காய் பால் சாதம் ருசியா இப்படி செய்து பாருங்க!

Advertisement

ருசியான தேங்காய் பால் சாதம் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

பிரியாணி சுவையில் இருக்கும் இந்த தேங்காய் சாதத்துடன், தயிர் பச்சடி, அல்லது சிக்கன் கிரேவி போன்று செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Advertisement

விடுமுறை நாட்களில் மட்டும் தான் அசைவம் செய்து சாப்பிடுகிறோம். அந்த வகையில் வார நாட்களில் ஒரு நாள் இந்த தேங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்.

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தேங்காய் பால் சாதம் | Thengai Paal Sadam Recipe In Tamil

Print Recipe
ருசியான தேங்காய் பால் சாதம் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
பிரியாணி சுவையில் இருக்கும் இந்த தேங்காய் சாதத்துடன், தயிர் பச்சடி, அல்லது சிக்கன் கிரேவி போன்று செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
விடுமுறை நாட்களில் மட்டும் தான் அசைவம் செய்து சாப்பிடுகிறோம். அந்த வகையில் வார நாட்களில் ஒரு நாள் இந்த தேங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword thengai paal sadam, தேங்காய் பால் சாதம்
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 2 கப் தேங்காய் பால் முதல் பால், இரண்டாம் பால்
  • 1 பிரின்சி இலை
  • 2 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மல்லி விதை
  • 2 முந்திரி
  • ¼ டீஸ்பூன் கசகசா
  • 1 நச்சத்திர சோம்பு

தாளிக்க தேவையானவை:

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 10 முந்திரி
  • 2 பட்டை
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 நச்சத்திர சோம்பு
  • 3 கிராம்பு
  • 1 கருப்பு ஏலக்காய்
  • கப் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ கப் புதினா,கொத்தமல்லி
  • உப்பு தேவைக்கேற்ப
  • ¾ கப் தக்காளி
  • ¼ கப் பச்சை பட்டாணி

Instructions

செய்முறை:

  • முதலில் அரிசியை நன்கு கழுவி குறைந்தது 25 நிமிடம் ஊறவைக்கவும்.
    Advertisement
  • அடுத்து ஒரு மிக்சியில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மல்லி விதை, முந்திரி, நச்சத்திர சோம்பு, கசகசா, சேர்த்து நைசாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பெரிய பாத்திரம் அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் முந்தி பருப்புகளை போட்டு வறுத்து தனியாக எண்ணெய் வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே எண்ணெயில் பட்டை, பிரிஞ்சி இலை, நச்சத்திர சோம்பு, கருப்பு ஏலக்காய், சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.
  • சிவந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கினால் போதும். பிறகு பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து கொழைய வாதக்காமல் வேகும் அளவிற்கு வதக்கினால் போதும்.
  • தக்காளி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து கலந்து 2 கப் தேங்காய் பால் 2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • தல தளவென கொதித்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக்கொள்ளவும். 5 நிமிடம் ஒரு கொத்தி வந்ததும்குறைவான தீயில் மூடி போட்டு தம் போட்டு 20 நிமிடம் விடவும்.
  • 20 நிமிடம் கழித்து திறந்து கிளறி விட்டு பரிமாறவும்.
  • இப்பொழுது ருசியான தேங்காய் பால் சாதம் தயார்.

இதையும் படியுங்கள் :வீடே மணக்க மணக்க ருசியான காளான் தேங்காய் பால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி, தோசை சாதத்து கூட சாப்பிட பக்காவாக இருக்கும்!

Advertisement
swetha

Recent Posts

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

1 மணி நேரம் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

3 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

8 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

8 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

8 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

9 மணி நேரங்கள் ago