நவம்பர் மாதத்தில் சனி பகவானின் வக்ர நிவர்த்தியாலும், சனிபகவான் தரக்கூடிய ஷஷ யோக பலன், சுக்கிரன், சூரிய பகவான் புதன் பகவான் என நானும் முக்கிய கிரகங்களின் மாற்றங்களால் நாவல் மாதத்தில் சில ராசிகளுக்கு வேலையில் வெற்றியும் நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு நாம ஒரு மாதத்தில் வியாபாரத்திலும் வேலை பார்க்கும் இடத்தில முன்னேற்றம் ஏற்படும் பணம் அதிகமாக சேரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் உகந்த மாதமாக இருக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் முன்னேற்றம் பாராட்டுக்கள் என அனைத்தும் கிடைக்கும் நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
கடக ராசி

கடக ராசி காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் எந்த காரியத்தை தொட்டாலும் பதில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். ஆடை தொடர்பான வியாபாரத்தில் உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வும் உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அனைத்து விஷயங்களும் முடிவடையும். வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நல்ல மாதமாக அமையும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் நல்ல வெற்றியை பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் மேலும் வாழ்க்கை துணையும் சிறப்பாக அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதியதாக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
விருச்சிக ராசி

தொழிலில் முன்னேற்றமடைய நவம்பர் மாதம் சிறந்த மாதம் நவம்பர் மாதத்தில் சூரிய பகவான் சுக்கிர பகவான் புதன் பகவான் என மூன்று கிரகங்களும் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்யப்போவதால் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இந்த மாதம் அமையும். அதிர்ஷ்டத்தால் உங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடைவீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். உங்களுடைய தொழில் மற்றும் வேலை முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக உள்ளது தொட்டதெல்லாம் பொன்னாக அமையும் எடுக்கும் அனைத்தும் முயற்சிகளும் நல்ல பலன்களை கொடுக்கும். உங்களுடைய வேலையில் நல்ல உத்வேகம் இருக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுடைய வேலைகள் அனைத்தையும் உரிய நேரத்தில் முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.


