- Advertisement -
சுவையான காலை உணவையை உண்போம். திணை அமிர்த சுவை கொண்ட உணவு பொருளாகும் . ஆதனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணமாக இருக்கும். அனைவரும் ரவா கிச்சடி
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கமகமக்கு சுவையான தினை தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
செய்து சாப்பிட்டு இருப்பார்கள், ஒருமுறை திணை கிச்சடி செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவை அற்புதமாக இருக்கும், பின்னர் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த திணை கிச்சடி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்
சுவையான திணை கிச்சடி| Suvaiyana Thinai Kichadi Receipe in Tamil
சுவையான காலை உணவையை உண்போம். திணை அமிர்த சுவை கொண்ட உணவு பொருளாகும் . ஆதனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணமாக இருக்கும். அனைவரும் ரவா கிச்சடி செய்து சாப்பிட்டு இருப்பார்கள், ஒருமுறை திணை கிச்சடி செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவை அற்புதமாக இருக்கும், பின்னர் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Yield: 3 people
Calories: 1945kcal
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 cup திணை தோல்நீக்கிய
- 1 தக்காளி
- 3 tbsp கேரட்
- 3 tbsp பீன்ஸ்
- 3 tbsp பச்சை பட்டாணி
- 15 கிராம் கொத்தமல்லி இலை
- 5 கிராம் புதினா
- ½ tsp கடுகு
- 3 tbsp எண்ணெய்
- ½ tbsp உளுத்தம் பருப்பு
- ½ tbsp கடலை பருப்பு
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- திணை கிச்சடி செய்ய முதலில் வாணலியில் திணையை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கப்பட்ட தக்காளி, மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும்.
- இப்போது மஞ்சள் பொடி, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கேரட், பீன்ஸ், போன்றவற்றை சிறிய அளவில் நறுக்கி கொள்ளவேண்டும்.
- அதனுடன் பட்டாணியையும் கலந்து வேக வைத்து கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்.
- பின்பு அதில் சரியான அளவில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பின் உப்பு சேர்த்து அதனுடன் வறுக்கப்பட்ட திணையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறிய படியே இருக்க வேண்டும்.
Nutrition
Serving: 300g | Calories: 1945kcal | Carbohydrates: 67g | Protein: 12g | Fat: 64.6g | Polyunsaturated Fat: 1.2g | Monounsaturated Fat: 0.8g | Cholesterol: 300mg | Sodium: 2485mg | Fiber: 6.1g