இறைவனுக்கு நாம் அதிக பணம் போட்டு நிறைய செய்ய வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் கிடையாது உண்மையான தூய்மையான பக்தியோடு இறைவனுக்கு நாம் படைத்த வழிபடக்கூடிய எதுவாக இருந்தாலும் அதனை இறைவன் ஏற்றுக்கொள்வார். ஒவ்வொரு இறைவனுக்கும் ஏற்றவாறு ஒரு நெய்வேதியம் உள்ளது. விநாயகருக்கு கொழுக்கட்டை போல முருகருக்கு அப்பம் போல ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான சில நெய்வேத்தியங்கள் உள்ளது அந்த வகையில் வீட்டில் பொண்ணும் பொருளும் செய்வதற்கு குபேரருக்கு எந்த நெய்வேத்தியத்தை வைத்து வழிபட வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
இறைவனுக்கு பிடித்த நெய்வேதியம்

பொதுவாக மகாலட்சுமி தேவியாருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு செய்வார்கள். கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைத்து வழிபாடு செய்வார்கள். விநாயகருக்கு கொழுக்கட்டையும் முருகருக்கு அப்பமும் ஆஞ்சநேயருக்கு வடமாலையும் படைத்து வழிபாடு செய்வதுண்டு அதேபோல் 16 செல்வங்களையும் கொடுக்கக்கூடிய குபேரருக்கு பிடித்தமான நெய்வேதியம் உள்ளது அதனை படைத்து வழிபாடு செய்யும் போது குபேரர் நமக்கு நல்ல வழி காட்டுவார்.
கோமாதா
பொதுவாக பால் கொடுக்கின்ற பசுவை நாம் கோமாதாவாக நினைத்து வழிபாடு செய்வோம் எனவே பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் தெய்வத்திற்கு உகந்த பொருட்கள் தான் அந்த வகையில் தயிர் என்பது மிகவும் விசேஷமான ஒன்று வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருந்தால் கூட அவற்றை தாண்டி வருவதற்கு தயிரை நெய்வேதியம் ஆக வைத்து வழிபடுவதில் சிறந்தது.
குபேரருக்கு பிடித்த நெய்வேதியம்

தெய்வ அம்சம் பொருந்திய இந்த தயிரை குபேரருக்கு நெய்வேதியம் ஆக வைத்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் தங்கமும் வெள்ளியும் குவியும் மேலும் மகாலட்சுமி தாயார் இருக்கும் ஒரு மண்சட்டியில் ஒரு கப் தயிரை வைத்து மனதார வழிபாடு செய்து கொள்ளலாம். மேலும் சந்திர பகவானுக்கும் தயிர் படைத்து வழிபடுவது மன அமைதிக்கு ஒரு சிறந்த வழி மேலும் வீட்டில் உள்ள சண்டைகளுக்கும் நிம்மதியின்மைக்கும் பௌர்ணமி தூறும் சந்திர பகவானை வேண்டி தயிரை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் மிகவும் சிறப்பானது
பௌர்ணமி தயிர் தானம்
பௌர்ணமி அன்று பணக்கஷ்டம் என்று வருபவர்களுக்கு ஒரு பாக்கெட் தயிரை தானமாக கொடுத்தால் நம்முடைய பண கஷ்டங்கள் நீங்கும். பசுக்களுக்கு தயிரையும் சர்க்கரையையும் சேர்த்து தானமாக கொடுத்தால் இன்பமான வாழ்க்கை அமையும். வியாழக்கிழமை தோறும் குபேரருக்கு தயிரை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டு வர உடல் ஆரோக்கியம் கிடைக்கும். வீட்டில் பொன் பொருள் அனைத்தும் கிடைக்கும் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குபேரர் சிலை வீட்டில் இருப்பதால் ஏற்படக்கூடிய சில விஷயங்கள்


