ஒரு சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மதத்திற்கு பிடித்த வரம் கிடைக்கவே கிடைக்காது அப்படி இருப்பவர்கள் மனதிற்கு பிடித்த வரம் அமைவதற்கு விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தருவார் விநாயகர் வழிபாட்டிற்கான சில முக்கியமான குறிப்புகளையும் அவரை வழிபடும் முறைகளைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி அனைத்து சங்கடங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியது அந்த நாளன்று விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அதிலும் மாசி மாதம் ஆவணி மாதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்வது திருமண தடைகளை நீக்கி விரைவில் நல்ல வரனை அமைய செய்யும்.
பூக்கள் வழிபாடு
விநாயகருக்கு புதன்கிழமை என்று திருமணமாகாதவர்கள் யாராக இருந்தாலும் அதிகாலையிலேயே குளித்து நீராடி விட்டு மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு எருக்கம் பூ அருகம்புல் கொண்டு விநாயகரை அலங்காரம் செய்து பூஜை செய்து கொள்ளுங்கள். பொதுவாக விநாயகருக்கு அருகம்புல், வன்னியிலே வில்வ இலை, தும்பை பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்தி பூ, எருக்கம் பூ போன்றவற்றால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. இதில் எந்த பூ கிடைத்தாலும் அதனை வைத்து விநாயகரை அலங்காரம் செய்து பூஜை செய்துவிட்டு ஒரு தாம்பூலத்தில் பச்சரிசியை நிரப்பி அதன் மேல் மஞ்சளை பன்னீர் விட்டு குறைத்து உங்கள் கைகளால் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் அவள் கொழுக்கட்டை போன்றவற்றை நெய்வேதியமாக படைத்து வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் ஆகியவற்றை கொண்டு தாம்பூலம் வைக்க வேண்டும்.
நவகிரக தோஷங்களை போக்கும் வழிபாடு
விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நவகிரக தோஷங்களை போக்கும் என்று கூறுவார்கள். தடைகளை நீக்கும் விநாயகர் இந்த தீப வழிபாட்டை நாம் செய்யும்போது எதிர்மறை சக்திகளையும் சேர்த்து அகற்றுவார். எனவே விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும் இப்படி செய்தால் விரைவில் திருமண தடை நீங்கி வரன் கை கூடி வரும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீ கணேஷம் விதினேஷம்
விவாஹார்தே தே நமஹ
இந்த மந்திரத்தை உச்சரித்து வர திருமண தடைகள் சீக்கிரத்திலேயே மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : நிம்மதியான வாழ்க்கையை தரக்கூடிய மந்திரம்!!




