Advertisement
காலை உணவு

ருசியான தூதுவளை சாதம் காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும், தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். சளி, இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம். கசப்பு தன்மை இருக்காது. மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும்.

Advertisement

தூதுவளை சாதம் | Thoothuvalai Sadam Recipe in Tamil

Print Recipe
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும், தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். சளி, இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword Thoothuvalai Satham
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 155

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் தூதுவளை
  • 2 கப் வடித்த சாதம்
  • 3 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையானஅளவு

வறுத்து

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 5 பல் பூண்டு
  • 2 வர மிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு

தாளிக்க

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடலை
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் தூதுவளையை கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்களான மிளகு, சீரகம்,பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து வறுபட்டதும் சுத்தம் செய்த கீரை சேர்த்து வதக்கவும்.
  • கீரை வதங்கியதும் ஆற விட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பூண்டு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
  • பின் அரைத்த விழுது சேர்த்து கிளறவும். அதனுடன் பெருங்காய தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தண்ணீர் வற்றி வதங்கியதும் சாதம் சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான். மிகவும் சுவையான தூதுவளை சாதம் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 155kcal | Carbohydrates: 2.9g | Protein: 3.4g | Fat: 0.2g | Sodium: 28mg | Potassium: 194mg | Fiber: 1.9g | Iron: 0.72mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

7 நிமிடங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

3 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

4 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

5 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

5 மணி நேரங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

7 மணி நேரங்கள் ago