ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு ராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் பெயர்ச்சி ஆவது அனைவரும் தெரிந்த ஒன்று. சனிபகவானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் பகவான் நுழையப் போகிறார் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 6.32 மணிக்கு பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகிறார் இதனால் சிறப்பான யோகம் உருவாகப் போகிறது செவ்வாய் பகவானின் வருகையால் ஒரு மூன்று ராசிகாரர்களுடைய வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது தொட்டதெல்லாம் அவர்களுக்கு வெற்றியாக போகிறது குறிப்பாக பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால் வியாபாரத்திலும் பணியிலும் அதிகம் முன்னேற்றம் ஏற்படும் மிகவும் தோல்வி அடைந்த வாழ்க்கை வெற்றியை பார்க்கப் போகிறது அந்த வகையில் மூன்று ராசியினருக்கான பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு பூசத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால் பெரிய நன்மைகள் எல்லாம் நடக்கும். வியாபார வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரமும் அதிகரிக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும் வீட்டில் சுபகாரியங்கள் பல நடக்கும்.
கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் வேலையில் சிறப்பாக இருக்கும் சம்பள உயர்வு பதவி உயர்வு என அனைத்தும் கிடைத்து பொருளாதார நிலை வலிமை அடையும். தன்னம்பிக்கையால் உச்சத்தை அடைய போகும் நேரம் இது குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் புதிய தொழிலும் நீங்கள் தொடங்கலாம் தொடங்கினால் முதல் நாளில் இருந்தே கூட லாபம் கொட்டும்.
மீன ராசி

இந்த காலகட்டத்தில் வணிகர்களில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும் உங்களுடைய செலவை ஒப்பிடும்போது உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகமாகவே இருக்கும். புதிதாக வீடு அல்லது கார் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு கடுமையாக படித்துக் கொண்டிருப்பவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சியால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி பாதிப்பு விலக வன்னி மரச்செடி வழிபாடு!!


