ஜோதிடத்தின் ரீதியாக சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் சக்தி வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகிறது. சூரிய பகவான் கிரகங்களின் அரசராகவும் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும் போது இரண்டும் ஒரு கட்டத்தில் இணையும் போது சில ராசிகளுக்கு நல்ல காலம் அதிர்ஷ்டம் அனைத்தும் அதிகமாகும். அந்த வகையில் ஜோதிடத்தின் ரீதியாக சூரியனும் செவ்வாயும் ஒரே நேர்கோட்டில் சஞ்சரிப்பதால் பிரதி யுதி யோகம் உருவாகப் போகிறது. இந்த யோகத்தால் மூன்று ராசிகள் அதிகமான நன்மைகளையும் பொருளாதார ரீதியாக நல்ல மாற்றங்களையும் பெறுவார்கள் வீட்டிலும் சுபகாரியங்கள் நடக்கும் அந்த வகையில் அந்த மூன்று ராசிகளை பற்றி காணலாம்.
கன்னி ராசி

இந்த பிரதி யுதி யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். கடின உழைப்பு போட்டால் அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்கும் இதனால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை சார்ந்து அதிக பயணத்தில் ஈடுபடுவார்கள். வணிகத்திலும் அதிக லாபம் கிடைக்கும்.
துலாம் ராசி

பிரதி யுதி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சேரும். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு தான தர்மத்திலும் ஈடுபடுவீர்கள். வணிகத்தில் இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணம் அதிகமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
தனுசு ராசி

இந்த பிரதி யுதி யோகத்தால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நிறைய பேருடைய பாராட்டுக்கள் கிடைக்கும். முக்கியமாக முதலாளியுடைய பாராட்டு கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும் நல்ல காரியமும் கைக்கூடும்.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!


