சமையலறையில் இந்த டப்பாவில் மட்டும் பணம் போட்டு வையுங்கள்! பணம் தானகவே வீடு தேடி வரும்!

- Advertisement -

இன்றைய நாட்களில் வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற நிலைமை தான் பலரது வீடுகளிலும் உள்ளது. ஆண்கள் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொடுத்தாலும் அவர்கள் சற்று அதிகமாகவே செலவு செய்பவர்கள். அதனால் பல வீடுகளிலும் சேமிப்பு பொறுப்பு அது ஒரு கடமையாகவே பெண்கள் செய்து வருவார்கள். அவர்கள் சம்பாதித்த பணமாக இருந்தாலும் சரி ஆண்கள் சம்பாதித்த பணமாக இருந்தாலும் சரி அதை சேமிப்பதில் கவனமாக இருப்பார்கள். அப்படி பெண்களின் சேமிப்பு பணம் அவர்கள் கையில் நிலையாக இருப்பதற்கும், பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருப்பதற்காகவும் ஒரு சிறிய பரிகாரத்தை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

-விளம்பரம்-

சமையல் அறை டப்பா

நாம் அப்படி ஒன்றும் புதியதாக எதையும் பார்க்கப்போவதில்லை எல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் காரணம் தெரியாமல் அதை நாம் மறந்து விட்டோம். நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நாம் அம்மா பாட்டி எல்லாம் வீட்டிற்கு செலவு செய்வதற்காக வைத்திருக்கக்கூடிய பணத்தை எல்லாம் பீரோ, மணி பர்ஸ், பர்ஸ் போன்ற எதிலும் வைத்திருக்க மாட்டார்கள் மாறாக நம் வீட்டில் இருக்கும் கடுக டப்பா, துவரம் பருப்பு, மிளகாய் டப்பா போன்று சமையலறையில் இருக்கும் இந்த டப்பாக்களில் எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். நாம் ஏதாவது செலவுக்கு பணம் கேட்டால் கூட அதில் இருந்து தான் எடுத்து தருவார்கள் நினைவிருக்கா.

- Advertisement -

பணம் வரவு

இப்படி வீட்டில் உள்ள பெண்கள் இந்த டப்பாவில் செலவுக்காக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக் கொண்டே இருக்கும் போது அந்த இடத்தில் என்னதான் பணம் செலவாகி கொண்டே இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு பணவரவு வந்து நாம் பணம் வைத்திருக்கும் டப்பாவில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஏன் நாம் நூறு இருநூறு என்று பணம் வைக்க ஆரம்பித்தால் கூட அது ஆயிர கணக்கில் சற்று பெரிய தொகையாக கூட சேர்ந்து வந்து நிற்கும். அந்த அளவிற்கு பணம் என்பது சேர்ந்து கொண்டே இருக்கும்.

பரிகாரம்

இப்படி நம் வீட்டில் சமையலறையில் இருக்கும் இந்த டப்பாக்களில் எல்லாம் பணத்தை நாம் வைக்கும்போது நான் போடும் பணம் சிறுக சிறுக சேருமே தவிர எக்காரணம் கொண்டு வீண் செலவாகாது. எப்படி சமையல் அறையில் உள்ள டப்பாக்களில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு வருபவர்கள் இதனை தொடர்ந்து செய்யுங்கள் மிகவும் நல்ல விஷயம். அப்படி நாம் பணம் போடும் துவரம் பருப்பு டப்பாவில் பணம் வைப்பதற்கு முன் பணம் சேர்வதற்காக துவரம் பருப்பு சேர்ந்திருக்கும் டப்பாவில் ஒரு சுக்கு போட்டுக் கொள்ளுங்கள், பின் ஒரு சின்ன பிளாஸ்டிக் கவர் எடுத்து சிறிதளவு ரூபாய் நோட்டா இருந்தாலும் சரி நாணயமாக இருந்தாலும் சரி போட்டு சுருட்டி துவரம் பருப்பு டப்பாவில் அடிப்பகுதியில் வைத்து விடுங்கள் அதற்கு மேல் துவரம்பருப்பை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசி பாத்திரம்

இப்படி துவரம் பருப்பு டப்பாவில் சுக்கை போட்டு வைப்பதனால் வீட்டில் பணம் என்பது சேமிப்பு என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் வீண் விரயம் ஆவது தடுக்கப்படும். அதேபோல் நாம் வீட்டில் அரிசி வைக்கும் பாத்திரங்களில் அதிலும் ஒரு துண்டு சுக்கு போட்டால் உங்கள் வீட்டை லட்சுமி கடாட்சத்துடன் இருக்கச் செய்யும் அதனால் இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள் பெரிய அளவில் கை கொடுக்கக் கூடியது. நீங்களும் வீட்டில் பணம் சேர்வதற்கு பெண்களின் கையில் பணம் நிலையாக தங்குவதற்கு இந்த பெரிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here