திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என்று காலம் காலமாக அனைவராலும் சொல்லப்படுகின்ற ஒன்று. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் திருப்பதி கோவிலுக்கு நிகரான சக்திகள் நம்மை சுற்றியுள்ள சில கோவில்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு திருப்பதிக்கு இணையான நிறைய சக்திகள் உள்ளது அந்த கோவிலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பழமையான கோவில்
650 வருட பழமையான சிலைகளை கொண்டுள்ள இந்த குறிப்பிட்ட கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். குழந்தை வரம் இல்லாமல் வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். அதனால்தான் மகப்பேறு என்கின்ற ஊர் பெயர் மறதி முகப்பேர் என்று மாறிவிட்டது. திருப்பதியில் நடக்கும் பூஜைகள் அனைத்தும் இந்த கோவிலிலும் நடக்கும்.
வெங்கடாசலபதி சிலை
திருமலையில் இரவு ஆரம்பிக்கப்படும் பூஜையிலிருந்து பகலில் நடக்கும் அனைத்து பூஜைகள் வரையும் இந்த கோவிலிலும் நடக்கிறது. அந்தக் கோவில் பெயர்தான் ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோவில். ஸ்ரீ அருணாச்சலம் முதலியார் கனவில் ஒன்பதரை அடி உயரம் கொண்ட சிலையை கனவில் கண்டு இந்த திருக்கோயிலை எழுப்பி உள்ளார். இந்த சிலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் சிலையை போலவே இருக்கும்.
குழந்தை வரம் தரும் கோவில்

இந்த கோவில் நகரத்தின் மையத்தில் விசாலமான இடத்தை கொண்ட கோவிலாக உள்ளது. ஏழு அடுக்குகளைக் கொண்ட ராஜகோபுரம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். புத்திர பாக்கியம் வேண்டி பக்தர்கள் சந்தான பூஜைகள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். இந்த குறிப்பிட்ட பூஜை பௌர்ணமியில் நடக்கும் மேலும் சுவாதி ரோகிணி புனர்பூசம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் கொண்ட நாட்களிலும் பூஜை நடக்கும். எனவே தம்பதியர்கள் ஒற்றுமையாக வந்து காலை 6:00 மணி முதல் 12 மணிக்குள் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
குழந்தை வரம் தரும் பூஜை
இந்த பூஜையின் போது சந்தான கோபால விக்ரகத்தை தொட்டிலில் வைத்த தம்பதியினரின் மடியில் தாம்பூலம் தேன் வெண்ணெய் போன்றவற்றை வைப்பார்கள். அப்பொழுது இந்த தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே, தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் கதஹ, தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்தி கரப்ரபோ, தேஹிமே தனயம் ஶீக்ரம் ஆயுஷ்மந்தம் யஶஶ்ரீணாம். குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 48 நாட்கள் இதனை தொடர்ந்து உச்சரித்து வர விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரசாதமாக தேன் வெண்ணெயை தம்பதியினர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மந்திரத்திற்கான பொருள்
நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கக்கூடிய குழந்தையை எங்களுக்கு அருள்வாயாக. எங்களுடைய சந்ததி விரைவில் வளரட்டும் என்பதுதான் பொருள்.
முகப்பேரில் இருக்கும் சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயமாக திருப்பதிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : உங்களால் திருப்பதிக்கு போக முடியவில்லையா? தடைப்படுகிறதா ?அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!





