அனைவரும் காலை முதல் இரவு வரை நிற்காமல் ஓடுவதற்கான காரணம் பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம் கையில் பணம் தங்கவே தங்காது. பணம் வீண்விரயம் ஆகி கொண்டே இருக்கும். பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவது அனைத்தும் வீணாகிவிடும் எனவே மிகவும் கடினப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணம் கையில் தங்குவதற்கு ஒரு சில பரிகாரங்களை செய்வது நல்லது. அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டியவை
மகாலட்சுமி தாயார்
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயாரை நாம் தினமும் வணங்கி வந்தால் மகாலட்சுமி தேவியாருடைய அருள் முழுவதுமாக கிடைத்து பணத்திற்கு பற்றாக்குறையே இருக்காது. மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து பணத்தை வாரி இறைப்பார்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு வெற்றிலையில் 5 ஏலக்காய் ஒரு ரூபாய் நாணயம் பூ பழம் பாக்கு போன்றவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்து முடித்தவுடன் ஏலக்காயை நீங்கள் பணம் வைக்கக் கூடிய இடத்தில் வைத்து விடலாம் பொதுவாக வெளியில காய்க்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய நாள்
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் செய்ய வேண்டும். பொதுவாக மதிய நேரத்தில் வரக்கூடிய குரு ஹோரையில் இதனை செய்வது மிக மிக நல்லது. இந்த வழிபாட்டை வாரம் தோறும் தவறாமல் செய்ய வேண்டும். மேலும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்த மல்லிகை மலர்களால் அலங்கரித்து அவருக்கு பிடித்த நறுமணமான சில பொருட்களான அண்ணாச்சி பழம் துளசி ஆரஞ்சு பழத்தோல் மல்லிகை பூ சந்தனம், வாசனை அதிகம் நிறைந்த ஊதுபத்தி போன்றவற்றை காட்டி தினமும் பூஜை செய்ய வேண்டும்.
ஏஞ்சல் நம்பர்
இந்த பரிகாரத்தோடு சேர்த்து ஒரு பிரியாணி இலையில் 199621147 என்ற ஏஞ்சல் நம்பரை மஞ்சள் அல்லது பச்சை நிற பேனாவால் எழுத வேண்டும். பிரியாணி இலைக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உள்ளது. அந்த பிரியாணி இலையில் ஏஞ்சல் நம்பரை எழுதிய பிறகு அதனை உங்களுடைய மணி பரிசல் வைக்க வேண்டும். இப்படி செய்தால் பணவரவு உங்களுடைய பர்சில் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும் செய்யக்கூடிய சில பரிகாரங்களை முழுமனதோடு செய்துவிட்டு அதற்கான உழைப்பையும் போட வேண்டும்.
இதனையும் படியுங்கள் : கை நிறைய பணம் கிடைக்க செய்ய வேண்டிய தீப வழிபாடு!


