- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணவுகள் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் தக்காளி புலால் செம ருசியாக இருக்கும். இவை பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு.
அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் தக்காளி புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த தக்காளி புலாவில் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.
இந்த புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். தக்காளியின் சாறுடன் வேகவைத்த புலாவ் உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலரச் செய்யும் சுவை கொண்டதாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தாவே போதுமானது. இந்த புலாவே அத்தனை சுவையானதாக இருக்கும் என்பதால் சிம்பிள் சைட் டிஷ்கூட போதும். இந்த தக்காளி தேங்காய் பால் புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் பாலக் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின் மிளகாய் தூள், கரம் மாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.
அதன்பிறகு அரிசியை தண்ணீர் வடிந்து சேர்த்து கலந்து விடவும். அரிசிக்கு தேவையான அளவு தண்ணிர் மற்றும் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி தேங்காய் பால் புலாவ் தயார்.






